சூரி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

நடிகர் சூரி திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஹோட்டல் பிசினஸில் ஈடுபட்டு வரும் அற்புதமான எளிமையை விரும்பும் மனிதர். மேலும் நடிகர் சூரி உடைய சொத்து மதிப்பு தெரிந்தால் நீங்கள் வாய்ப்பிளந்த விடுவீர்கள்.

இந்த நடிகர் தமிழ் ரசிகர்களால் விரும்பப்படும் காமெடி நடிகைகளின் வரிசையில் இருந்து தற்போது ஹீரோ அந்தஸ்தை அடைந்து விட்டார். ஆரம்ப நாட்களில் கிடைத்த சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களை செய்து வந்தவர்.

இவர் ஒரு படத்தில் பரோட்டாவை சாப்பிடும் போட்டியில் பரோட்டாவை தின்று அதெல்லாம் முடியாது இன்னொரு முறை முதல்ல இருந்து சாப்பிடுவோம் என்ற வசனத்தை பேசும் காட்சியின் மூலம் திரையுலகில் பிரபலமானார். இதனை அடுத்து இவரை பரோட்டா சூரி என்று அன்புடன் அழைத்தார்கள்.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்த இவர், தமிழ் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

காமெடியில் கலக்கி வந்த இவர் ஹீரோவாக அவதாரம் எடுத்திருப்பதை ரசிகைகள் பலரும் வரவேற்ற நிலையில், இவர் தனது சொந்த ஊரான மதுரையில் நிறைய ஹோட்டல்களை திறந்து வைத்திருக்கிறார்.

உணவு கிடைக்காமல் வறுமையில் வாடி வரும் அனைத்து மக்களுக்கும் தரமான, விலை குறைவான உணவினை கொடுத்து உதவி செய்வதில் முன்னோடியாக இருக்கிறார்.

இப்படி தனது சொந்த உழைப்பின் மூலம் திரைத்துறையில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்ட இவரின் சொத்து மதிப்பு சுமார் 40 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அட பரோட்டா சூரிக்கு எத்தனை கோடி சொத்துக்களா? என்று கேட்டு வாய் பிளந்து விட்டார்கள். எந்த விதமான சினிமா பின் புலமும் இல்லாமல் தன் திறமையையும், உழைப்பையும் போட்டு இந்த அளவுக்கு இவர் உயர்ந்திருக்கிறார் என்றால் நாம் பாராட்டி தான் ஆக வேண்டும்.

எனவே கடுமையான முயற்சி, ஒருவரை வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேற்றி மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பெற்றுத் தரும் என்பதற்கு பரோட்டா சூரியை உதாரணமாக கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version