கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமாக அறிவித்த அமலா பால்..! வியப்பில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டவர் நடிகை அமலாபால். பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தில், விதார்த் ஜோடியாக அமலாபால் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை தந்தது. ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை, திருட்டுப்பயலே 2, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, நிமிர்ந்து நில், அம்மா கணக்கு உள்ளிட்ட பல படங்களில் அமலாபால் நடித்துளளார். இதில் ஆடை படத்தில் உடலில் ஆடையில்லாமல் நடித்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.

இயக்குநர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்த அமலாபால், கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் பிரிந்தார். தொடர்ந்து படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்த அவர் கிளாமர் ஆடைகளிலும், நீச்சல் உடைகளிலும் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களை மூடு கிளப்பி வந்தார். சமீபத்தில் இவர் நடித்த டீச்சர், கிறிஸ்டோபர் ஓடிடி தளங்களில் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 26ம் தேதி தனது காதலர் என ஜகத் தேசாய் என்பவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை பதிவிட்டார். அதைத்தொடர்ந்து நவம்பர் முதல் வாரத்தில் அமலாபால் – ஜகத் தேசாய் திருமணம் செய்துக்கொண்டதாக புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

திருமணமான இரண்டே மாதத்தில், அமலாபால் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார். அதில் வயிறு சற்று உப்பிய நிலையில், அமலாபால், ஜகத்தேசாய் இருவரது கைகளும் வயிற்றின் பக்கவாட்டில் கோர்த்து பிடித்தபடி இருப்பது போன்ற புகைப்படம், அமலாபால் கர்ப்பமாக இருப்பதை காட்டுகிறது. இப்படி வித்யாசமாக தனது கர்ப்பத்தை ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார் அமலாபால்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version