அடிக்கடி கணவரை மாற்றிய நடிகை லட்சுமி..! பலரும் அறியாத மர்ம பக்கம்..!

தமிழ் சினிமாவில் நடிகை லட்சுமி இப்போதும் ரசிக்கப்படும் ஒரு நடிகையாக இருப்பவர். துவக்கத்தில் எம்ஜிஆருடன் சங்கே முழங்கு, என் அண்ணன், மாட்டுக்கார வேலன் போன்ற படங்களில் நடித்திருந்தார். சிவாஜி கணேசனுடன் ஆனந்தக்கண்ணீர் போன்ற படங்களில் நடித்தவர்.

சம்சாரம் அது மின்சாரம் படம் இப்போதும் ரசிக்கப்பட காரணம், லட்சுமியின் அந்த குடும்பப்பாங்கான நடிப்புதான். ரகுவரனின் மனைவியாக வாழ்ந்திருப்பார். ஒரு நடுத்தர குடும்ப மருமகளை அப்படியே வெளிப்படுத்தி இருப்பார்.

ஜீன்ஸ், வேல், ருத்ரா, பொல்லாதவன், இன்று நீ நாளை நான் என பல படங்களில் நடித்த லட்சுமி, அசாத்தியமான நடிப்பு திறமை கொண்டவர். எந்த கேரக்டர் என்றாலும் அனாசயசமாக நடித்து விடுபவர். முதுமையான நிலையில், கோட்டூர்புரத்தில் இவர் தற்போது தனியாக வசித்து வருகிறார்.

அதற்கு காரணம், அவர் அடிக்கடி கணவரை மாற்றியவர் என்பதுதான். முதலில் பாஸ்கரன் என்பவரை பெற்றோரே பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அவருடன் தொடர்ந்து லட்சுமி வாழவில்லை.

அடுத்து மலையாள நடிகர் மோகன் ஷர்மா என்பவரை திருமணம் செய்தார். ஒரு கட்டத்தில் அவருடன் வாழவும் பிடிக்காமல், விவகாரத்து செய்து விட்டார்.

அடுத்து நடிகர் மற்றும் இயக்குநர் சிவச்சந்திரனை திருமணம் செய்தார். ஒரு கட்டத்தில் அவரையும் விட்டு பிரிந்தார். லட்சுமி, சிவச்சந்திரன் இருவருக்குமே மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது.

லட்சுமி மகள் ஐஸ்வர்யாவும், தாயின் வழியே திருமணம் செய்து வைத்தும் கணவரை விட்டு பிரிந்து, பல ஆண்டுகளாகவே தனிமையில் வாழ்ந்துவருகிறார். அவர் ராசுக்குட்டியில் பாக்யராஜ் ஜோடியாக நடித்தவர்தான்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version