திருமணத்திற்கு முன்பே உருக உருக வேறு ஒரு நடிகரை காதலித்தார்.. மீனாவின் ரகசியத்தை உடைத்த நடிகர்..!

திருமணத்துக்கு முன்பே நடிகர் ஒருவரை காதலித்திருக்கிறார் மீனா.

இதுகுறித்து நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, நடிகை மீனாவே இதை பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறார். நான் ஆரம்பத்தில் நடிகையாக இருந்த போது இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனை விழுந்து விழுந்து காதலித்தேன்.

என்னுடைய வீட்டில் என்னுடைய அறையில் ஹிருத்திக் ரோஷன் போட்டோக்களையே அதிகமாக வைத்திருப்பேன். நான் ஹிருத்திக் ரோஷனை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் கட்டாயமாக இருந்தேன்.

ஆனால் அதற்குள் ஹிருத்திக் ரோஷன் திருமணம் செய்துக்கொண்டு விட்டார். இதன் காரணமாக வீட்டில் பார்த்த வித்யாசாகரை நான் திருமணம் செய்துக் கொண்டேன்.

வித்யாசாகருக்கும் எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நைனிகா இப்போது படித்துக்கொண்டு இருக்கிறார். ஒரு படத்தில் கூட விஜய்க்கு மகளாக நடித்தார், என்று கூறியிருக்கிறார் மீனா.

இந்த தகவல் நான் சொன்னது அல்ல. நடிகை மீனாவே பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த தகவலை சொல்லி இருக்கிறார்.

ஏனென்றால் நான் பொய் சொல்வதாக நீங்கள் நினைக்க கூடாது. நான் ஆதாரம் இல்லாமல் எந்த தகவல்களையும், செய்திகளையும் சொல்ல மாட்டேன் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.

நடிகை மீனாவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மனதார காதலித்த நிலையில், திருமணத்துக்கு முன்பே உருக உருக வேறு ஒரு நடிகரை மீனா காதலித்த தகவல், ரசிகர்களிடையே ஆச்சரியத்தை தந்துள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version