அந்த சம்பவத்திற்கு பிறகு வாழவே பிடிக்கல… நளினி கூறிய அதிர வைக்கும் தகவல்..!

கணவரை பிரிந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தைகளோடு தவித்து வந்ததாக கூறி இருக்கும் நளினி விவாகரத்துக்கு பிறகு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வாழவே பிடிக்கவில்லை என்ற அதிர்ச்சி தரும் தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

இந்தத் தகவலை அண்மை பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் இவர் அந்த சமயத்தில் ஏற்பட்ட மனவேதனையை பகிர்ந்து இருக்கிறார். இன்று சீரியல்களில் அதிகளவு நடித்து வரும் நளினி ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.

சத்யராஜ், முரளி, விஜயகாந்த், மோகன், பிரபு, ராமராஜன் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். அப்படி ராமராஜனோடு இணைந்து நடிக்கும் போது தான் காதல் ஏற்பட்டு உள்ளது.

வழக்கம் போல இவரது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து அவரது பெற்றோர்களை எதிர்த்து ராமராஜனை திருமணம் செய்து கொண்டார்.

மிகவும் சந்தோஷமாக இவரது வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. மேலும் இந்த தம்பதிகளுக்கு அருண் மற்றும் அருணா என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். யார் கண் பட்டதோ தெரியவில்லை கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக சட்டபூர்வமாக விவாகரத்து பெற்ற இவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

விவாகரத்து செய்திருந்தாலும் இருவரும் பிள்ளைகளின் மீது கொண்டிருந்த பாசத்தால் ராமராஜன் பிள்ளைகளின் திருமணத்திற்கு வந்திருந்து சீரும் சிறப்புமாக திருமணத்தை நடத்தினார்.

ராமராஜனை விவாகரத்து செய்ததை அடுத்து நளினி சினிமா மற்றும் சீரியல்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை நளினி தனது காதல் கதை குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தன் வாழ்க்கையில் சோகம் நிறைந்த ஒன்றாக தனது விவாகரத்தை கூறியிருக்கிறார்.

14 ஆண்டுகளாக கணவனுடன் சேர்ந்து வாழந்த அவரை பிரிவோம் என்று எண்ணவில்லை. எனினும் மகளிர் தினத்தன்று மார்ச் எட்டாம் தேதி தனக்கு விவாகரத்து கிடைத்தது. அதை என் வாழ் நாளில் மறக்கவே முடியாது. மேலும் எந்த பெண்ணிற்கும் இது போன்ற நிலை ஏற்படக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் என்னால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியவில்லை. மேலும் நான் எப்படி வாழ்வேன் என்று மனதிற்குள் ஒரு மிகப்பெரிய போராட்டமே ஏற்பட்டது. அத்தோடு தனித்து என்னால் வாழ முடியும் என்பதை நான் கற்பனை கூடி செய்து பார்க்கவில்லை.

எனினும் குழந்தைகளுக்காக வாழ வேண்டுமே என்ற மனநிலையில் இருந்த எனக்கு குட்டி பத்மினியின் கிருஷ்ணதாசி சீரியலில் நடிக்க வேண்டும் என்று கூறிய போதும், நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. ஆனால் அவர்கள் என்னை எனக்கு புரிய வைத்து நடிக்க வைத்தார்கள்.

இந்த வகையில் கிருஷ்ணதாசி சீரியலில் நான் நடித்த மனோன்மணி கதாபாத்திரம் என் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இருந்தது. அதில் ஒரு தைரியமான பெண்ணாக நான் நடித்து இருந்தேன்.

இதனை அடுத்து அந்த கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷன் என்னை இந்த அளவிற்கு வளர்த்துள்ளது என்று கூறியதோடு, இவரது பேட்டி கணவனை இழந்த பெண்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடிய வகையில் இருந்தது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version