நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர். அவருக்கு பிறகு, வேறு எந்த ஒரு போட்டியாளரும் இந்த அளவுக்கு பேசப்பட்டது இல்லை. ஓவியா ஆர்மி உருவானதே அவரது பெருமையைச் சொல்லும்.
சினிமாவிலும் சில படங்களில் நடித்தார் ஓவியா. குறிப்பாக முத்துக்கு முத்தாக, களவாணி, ஹலோ நான் பேய் பேசறேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஓவியாவை பொருத்தவரை நல்ல நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், இவருக்கும் ஜூலிக்கும் இடையே ஒரு பிரச்னை ஏற்பட்டது. அதில் ஜூலி பொய் பேசுகிறார் என்பதை நிரூபிக்க, கமல் குறும்படம் ஒன்றை போட்டுக் காட்டினார். அதன்பிறகே பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறும்படம் டிரண்டிங் ஆனது.
ஓவியாவுக்கு பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் இதுவரை இல்லை என்றாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்கிறார். விளம்பர படங்களில் நடிக்கிறார். குறிப்பாக மாடலிங் செய்தும் வருகிறார். பெரிய வாய்ப்புகள் விரைவில் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.
சமீபத்தில் அவர் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதாவது பெண்கள் அடிக்கடி மன உளைச்சலில் சிக்கிக் கொள்கின்றனர். அடிக்கடி விரக்தியில் மனம் வேதனையில் தவிக்கின்றனர். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலும், தேற்றுவதும் மிக முக்கியம்.
பெண்கள் சோகமாகவோ அல்லது மன அழுத்தத்துடனும் அல்லது கோபமாகவோ இருக்கும் நேரத்தில் கணவரோ அல்லது காதலனோ அவர்களுடைய நெற்றியில் முத்தமிட்டால் மிகவும் பிடிக்கும் அவர்கள் ஆறுதல் அடைவார்கள் என கூறியிருக்கிறார் நடிகை ஓவியா.