என் பொண்ணு கல்யாணத்துக்கு… பேச முடியாமல் கதறி அழுத நடிகை ராதா..! என்ன ஆனது..?

நடிகை ராதா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக 1980, 90களில் வலம் வந்தவர். இவரது அக்கா அம்பிகாவும் பிரபல நடிகையாக அப்போது இருந்தார். இருவரும் முன்னணி நடிகைகளாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தனர்.

ராதா, விஜயகாந்துக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார். அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், மனக்கணக்கு, சட்டம் ஒரு விளையாட்டு, உள்ளத்தில் நல்ல உள்ளம், நினைவே ஒரு சங்கீதம், மீனாட்சி திருவிளையாடல் உள்ளிட்ட படங்களில் விஜயகாந்த், ராதா நடித்துளளனர். இதில் அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், நினைவே ஒரு சங்கீதம் போன்ற படங்கள் மெகா ஹிட் படங்களாக அமைந்தன.

கடந்த மாதம் 28ம் தேதி, நடிகர் விஜயகாந்த் காலமான நிலையில் சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ராதா நேரில் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது ராதா கூறுகையில், சினிமாவில் நடித்த காலகட்டத்துக்கு அப்புறம் அவரை நான் கடைசியாக பார்த்தது, ஊட்டியில் நடந்த ஒரு ஷூட்டிங்கில்தான். அதற்கு பிறகு பார்க்கவில்லை.

விஜயகாந்த் பிறந்த நாள் வரும்போது, போனில் அழைத்து அவருக்கு வாழ்த்துகள் சொல்வேன். என் மகள் கார்த்திகா திருமணத்துக்கு அழைப்பிதழ் தர விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றேன். அப்போது அவரை பார்க்க முடியவில்லை. அவரது மனைவி அக்கா பிரேமலதாவிடம் அழைப்பிதழ் கொடுத்தேன். கல்யாணத்துக்கு ஒருநாள் முன்னதாகவே, அக்கா திருமணத்துக்கு வந்து வாழ்த்திவிட்டு சென்றார். அது ரொம்ப பெரிய விஷயமாக எனக்கு இருந்தது.

ஆனால் இப்படி ஒரு சூழ்நிலையில், இவரை இங்கு வந்து பார்ப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, என்றபடி கண்ணீர் விட்டு அழுத ராதா அவர் நல்லவர், நல்லது செய்தவர்கள் நம்முடன் இருப்பார்கள், என்று கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version