யாருடா இது.. நாட்டாமை டீச்சரா..? – லேட்டஸ்ட் போட்டோ பார்த்து வியந்த ரசிகர்கள்..!

திரை உலகத்தில் பட்டி, தொட்டி எங்கும் பரபரப்பை ஏற்படுத்திய படங்களின் வரிசையில் ஒன்றாக நாட்டாமை திரைப்படத்தை கூறலாம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு நடிகர் ராமராஜன் நாயகனாக நடித்த வில்லுப்பாட்டு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராணி.

இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை அசத்தியிருக்கிறார். எனினும் சில காலம் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் வராத காரணத்தால் தான் இது போன்ற கிளாமர் பாடல்களுக்கு ஆட ஆரம்பித்தார்.

இதனை அடுத்து கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளி வந்த நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக்கொண்ட நடிகை ராணி இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் இவர் சீயான் விக்ரமுடன் ஜெமினி திரைப்படத்தில் ஓ போடு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். இந்த பாடல் தமிழகம் முழுவதும் ஒரு மெகா ஹிட்டான பாடலாக மாறியது. நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்த இவருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.

இதனை அடுத்து இனி திரை வாய்ப்புகள் வராது என்பதை உணர்ந்து கொண்ட இவர், ஹிந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு விலகி விட்டார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை ராணி சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அட.. இது நம்ம நாட்டாமை டீச்சரா? என்று நக்கலாக கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

மேலும் இன்று இணையத்தில் அதிகமாக பார்க்கக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் மாறிவிட்டது. இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகளவு லைக்குகளை போட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version