என் புருஷன் கிட்ட இதை எதிர்பார்த்தேன்.. இது தப்பா.. சொல்லுங்க.. பார்த்திபன் விவாகரத்து..! நடிகை சீதா விளாசல்..!

நடிகை சீதா நடிகர் பார்த்திபன் இடையே மலர்ந்த காதல் அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான கதை எல்லாம் பழைய கதை. அது பற்றி புதுசாக எதுவும் சொல்வதற்கில்லை.

ஆனால் இவர்கள் எதனால் பிரிந்தார்கள் என்று இவர்கள் வாயாலேயே பல இடங்களில் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக நடிகை சீதா பல இடங்களில் கூறியிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றிலும் தன்னுடைய கணவரை எதனால் பிரிந்தேன் இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பதை இலை மறைமுறையாக கூறியிருக்கிறார்.

தன்னுடைய விவாகரத்துக்கு பிரதானமான காரணமாக நடிகை சீதா எதை கூறினார் என்பதை கடைசியாக பார்க்கலாம். அதற்கு முன்பு நடிகை சீதா கூறிய ஒரு விஷயம் திருமணம் செய்து கொள்ள இருக்கக்கூடிய பெண்களுக்கு மிக முக்கியமான ஒரு விஷயம் என கூறலாம்.

இது திருமணம் செய்து கொள்ள இருக்கக்கூடிய பெண்கள்.. ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் பெண்கள் அனைவருக்குமே இந்த விஷயம் ஒரு பாடமாக இருக்கும் என கூறாலாம்.

நடிகை சீதா என்ன கூறுகிறார் என்றால், திருமணம் ஆகிவிட்டது அல்லது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் ஒரு பெண்ணாக நீங்கள் உங்களுடைய வருமானத்திற்கான வழியை வைத்திருக்க வேண்டும்.

உங்கள் கணவரை முழுமையாக நீங்கள் சார்ந்து இருக்கிறீர்கள் என்றால் கணவருக்கு உங்கள் மீது ஒரு விதமான ஆதிக்க மனப்பான்மை வந்துவிட வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், அனைத்து ஆண்களும் அப்படி இருப்பார்களா..? என்றால் நிச்சயமாக நான் அப்படி கூற மாட்டேன்.

மனைவியை வேலைக்கு அனுப்பாமல், வீட்டிலேயே வைத்து மகாராணி மாதிரி பார்த்துக் கொள்ளக்கூடிய ஆண்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், பிரச்சனை செய்யக்கூடிய ஆண்கள்.. அவர்கள் எதனால் அப்படி இருக்கிறார்கள்.. என்று யோசித்துப் பார்த்தால் அவர்களுடைய மனைவிகளுக்கு ஒரு வருமான வாய்ப்பு இருக்காது.

அவர்கள் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.. வீட்டிலேயே இருப்பார்கள்.. இதுவே பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக நான் கூறுவேன்.

பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்.. பணம் சம்பாதிக்கிறார்கள்.. நினைத்த நேரத்தில் உங்களுடைய கணவரால் உங்களை பார்க்க முடியாது.. என்ற ஒரு சூழ்நிலை இருக்கும்.. வீட்டிலேயே இருந்தால் முகத்திற்கு பவுசர் அடித்து.. பொட்டு வைக்கும் பழக்கம் கூட பல பெண்களிடம் இல்லை.. ஆனால், நீங்கள் வேலைக்கு செல்வதால் உங்களை அழகாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வீர்கள்.. அப்பொழுது கண்டிப்பாக இயற்கையாகவே உங்கள் மீது ஒரு ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.. இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து என பதிவு செய்திருக்கிறார் நடிகை சீதா.

நடிகை சீதாவின் கருத்தை நீங்கள் எடுத்துக் கொள்வதும் அல்லது தவறு தொடுவதும் படிக்கக்கூடிய உங்களுடைய முழு விருப்பம் அடுத்து பார்த்திபனை பிரிவதற்கு என்ன காரணம் என்று நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது சுகாசினி ஒரு திரைப்படத்தில் ஒரு பாடல் பாடுவார் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் என்ற பாடுவார். அதே தான் எனக்கும் இருந்தது.. ஒரு பெண்ணாக என்னுடைய புருஷன் குறித்து இந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தது என்னுடைய தவறா..? சொல்லுங்க.. என தொகுப்பாளரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதன் மூலம் நடிகை சீதா எதனால் பார்த்திபனை பிரிந்தார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் கமெண்ட் செக்ஷனில் சொல்லுங்களேன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version