திட்டமிட்டு நடந்த ஸ்ரீதேவி மறைவு.. உயிரை குடித்த ஜப்பான் பாம்பு.. நேரில் பார்த்த பெண் சாட்சி..!

நடிகை ஸ்ரீதேவி தமிழில் பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழில் ரஜினி, கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து மிக பிரபலமானார். ஒரு கட்டத்தில் பாலிவுட்டுக்கு போய் அங்கும் மிக பிரபலமான ஸ்டார் நடிகையாக மாறி, அனில் கபூர் படங்களில் ஜோடியாக நடித்தார். பின் அவரது அண்ணன் போனி கபூரையே திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் தனது குடும்ப திருமண விழாவில் கணவர் போனி கபூருடன் பங்கேற்ற ஸ்ரீதேவி, அங்குள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் இரவு தங்கினார். மறுநாள் காலை அவர் ஓட்டல் பாத்ரூமில் இருந்த பாத் டப்பில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். சடலத்தை கைபற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் கூறுகையில், ஸ்ரீதேவி இறந்தது இயற்கை மரணமல்ல, விபத்தும் அல்ல. தற்செயல் மரணம் என்று போலீசார் உறுதி செய்தனர். அதே நேரத்தில் 240 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காகவும், ஸ்ரீதேவியின் அதிகமாக சொத்துகளை அபகரிக்கவும் போனி கபூர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரே ஸ்ரீதேவியை கொன்றுவிட்டதாக ஊடகங்கள் தரப்பில் பரபரப்பான செய்திகளும் வெளியானது.

ஆனால் போனிகபூர் அளித்த நேர்காணலில், ஊடகங்கள் தரப்பில் தவறான குற்றச்சாட்டுகள் என்மீது எழுந்ததால் போலீசாா் தரப்பில் எல்லாவிதமான விசாரணைகளும் என்னிடம் செய்தனர். அதற்கு ஒத்துழைத்தேன். கடைசியாக உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி டயட் காரணமாக பல மாதங்களாக சரியாக சாப்பிடவில்லை. அழகுக்கான பல சிகிச்சைகளும் மருந்து மாத்திரைகளும் எடுத்துக்கொண்டார். அதுதான் அவர் இறக்க காரணம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகையாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த தீப்தி பென்னட்டி என்பவர், திடீர் என ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தி இவர், ஸ்ரீதேவி இறப்பதற்கு முன், லக்னோவில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக ஸ்ரீதேவியை அழைத்துள்ளார். அந்த நிகழ்ச்சி நடப்பதற்கு ஒருவாரம் முன்பே ஸ்ரீதேவி இறந்துவிட்டார்.

இதையடுத்து ஸ்ரீதேவி மரணம் குறித்து பல விஷயங்களை துப்பறிவு செய்து ஆதாரங்களை திரட்டிய தீப்தி பென்னட்டி, ஸ்ரீதேவிக்கு பால் சார்ந்த ஏதோ ஒரு பொருளில், அவர் இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன், ஜப்பான் பாம்பின் விஷம் கலந்த உணவு தரப்பட்டுள்ளது. அதுதான் அவரது இறப்புக்கு உண்மையான காரணம். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் ஆதாரங்களுடன் வழக்கு தொடுக்க போகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த வழக்கை சுப்ரீம் ஏற்று விசாரணை நடத்துமா, தள்ளுபடி செய்யுமா எனத் தெரியவில்லை, என்று அதில் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version