அஜித், விஜய் பட நடிகையா இது..? – கணவருடன் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காய் நடித்த நடிகைகள் ஒரு சிலர்தான். அதில் மிக முக்கியமானவர் நடிகை சுவலட்சுமி, கடந்த 1990களில் நடிகர் அஜீத், விஜய்க்கு ஜோடியாக நடித்தவர்.

கனவு நாயகி சுவலட்சுமி..

கடந்த 1995ம் ஆண்டில் இயக்குநர் வசந்த் இயக்கத்தில், நடிகர் அஜீத்குமார் நடித்த முதல் படம் ஆசை. இதில்தான் அஜீத்குமார் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதில் சுவலட்சுமிதான் அஜீத்குமாருக்கு நாயகி.

நிலாவே வா, லவ்டுடே படங்களில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் லவ்டுடே படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அஜீத், விஜய் மட்டுமின்றி கார்த்தி, பிரபு, முரளி ஆகியோருடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.

கோகுலத்தில் சீதை, பொன்மனம், சுயம்வரம், ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழில் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்தார். அந்த காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு நாயகி சுவலட்சுமி தான்.

9 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாத்துறையில் இருந்த சுவலட்சுமி, 2002ம் ஆண்டில் ஸ்வகேடா பானர்ஜி என்பவரை சுவலட்சுமி திருமணம் செய்துக்கொண்டார்.

பின் கலிபோர்னியாவில் கணவருடன் செட்டிலாகி விட்டார்.

கணவருடன்…

பல ஆண்டுகளுக்கு முன் கணவருடன் சுவலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித், விஜய் பட நடிகையா இது, என ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version