அசிங்கமான காரணத்துக்காக விவாகரத்து பெற்ற நடிகைகள்..!

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் மட்டுமே திருமணம் செய்துக்கொண்டு மற்றவர்களை போல சகஜமான குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.

ஒரு சில நடிகைகள் கணவர்களை பிரிந்து விடுகின்றனர். அல்லது ஒருவரை விட்டு விலகி, மற்றொரு கணவரை தேடிக்கொள்கின்றனர்.

இப்படி சில நடிகைகளின் திருமணம் 3, 4 என்று கூட எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் புதிய கலாசாரமாக லிவிங் டூ ரிலேசன்ஷிப் என்ற புதிய வாழ்க்கை முறை தமிழ் சினிமா நடிகர் நடிகைகளுக்குள் வந்திருக்கிறது.

அதன்படி ஒருவரை ஒருவர் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே லிவிங் டூ ரிலேசன்ஷிப் முறையில் பல ஆண்டுகாலம் ஒன்றாக வாழ்வது, எப்போது கருத்து வேறுபாடும் பிடிக்காத நிலை ஏற்படுகிறதோ அப்போது பிரிந்து விடுவது.

அந்த வகையில் முதலில் கமல்ஹாசன் – கவுதமி 17 ஆண்டுகள் வாழ்ந்தனர். கமல் மகள் ஸ்ருதிஹாசன், தனது காதலருடன், மும்பை வீட்டில் அந்த உறவில் வாழ்கிறார்

நடிகர் ஜெய் – அஞ்சலி, நடிகர் ஜெய் – வாணி போஜன், அமீர் – பாவனி போன்றவர்கள் அந்த முறையில் வாழ்ந்திருப்பதாக தகவல் பரவியுள்ளது.

எனினும் சில நடிகைகள் கணவருடன் வாழ்ந்த நிலையில், அவர்களது கேரக்டர் பிடிக்காமலும், அவருடன் தொடர்ந்து வாழ முடியாத சூழலிலும் பிரிந்துள்ளனர்.

ரோஹினி…

அந்த வகையில் நடிகை ரோஹினி, தமிழில் பல படங்களில் நடித்தவர். துவக்கத்தில் கதாநாயகியாக நடித்த ரோஹினி, இப்போது ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசனின் தோழியான இவர், சமூக சீர்திருத்த சிந்தனைகளில் நாட்டம் கொண்டவர். நடிகர் ரகுவரனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

ரகுவரனின் குடிப்பழக்கம் காரணமாக அவரை விட்டு விலகி விட்டார். விவாகரத்து பெற்ற நிலையில், தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். நடிகர் ரகுவரன் பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டார்.

வெயில் பிரியங்கா..

வெயில் படத்தில் நடித்தவர் பிரியங்கா. இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. ஆனால் மற்ற படங்களில் இவர் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இவரும் காதல் திருமணம்தான் செய்துக்கொண்டார். பிரியங்காவின் கணவர் பெயர் லாரன்ஸ் ராம். இவரும் சினிமா துறையில் இருப்பவர்தான்.

வெயில் பிரியங்கா இவரை விவகாரத்து செய்தார். இதற்கு, ரொம்ப அசிங்கமான காரணம்.

பிரியங்காவின் கழுத்தில் தாலி கட்டிய கணவனே, அவரது அருவறுப்பான நிர்வாண படங்களை வெளியிட்டார் என்பதுதான் காரணம்.

இந்த குற்றச்சாட்டை சொல்லி, தனது கணவரை விட்டு பிரிந்தார் நடிகை வெயில் பிரியங்கா.

ஊர்வசி…

நடிகை ஊர்வசியை, நடிகர் கமல் நடிப்பு ராட்சசி என்று குறிப்பிடுவார். அந்த அளவுக்கு மிகச்சிறந்த நடிகையாக ஊர்வசி பல படங்களில் நடித்திருக்கிறார்.

முந்தானை முடிச்சு படத்தில் கே பாக்யராஜூடன் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பல நடிகர்களுடன் நடித்து மிக பிரபலமானவர்.

இவர் மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பிறகு ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

சமீபத்திய வீடியோ ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் இந்த விவரங்களை கூறியிருக்கிறார்.

இப்படி பல நடிகைகள் அசிங்கமான காரணத்துக்காக விவாகரத்து பெற்றிருக்கின்றனர் என பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version