“அப்போவே வேணாம்-ன்னு சொன்னேன்..” – ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து..? – அதிர வைக்கும் தகவல்..!

நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற தகவல் தான் கடந்த இரண்டு தினங்களாக பாலிவுட் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

உலக அழகி பட்டம் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த ஒரு நடிகை.

தற்போது கூட பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய் நினைப்பு என்ற சொல்லாடல் கிராமப்புறங்களில் இருப்பதை நம்மால் கேட்க முடியும். அந்த அளவுக்கு உலக அழகி என்றால் நான் தான் என்பதை ரசிகர்கள் மத்தியில் பதிய வைத்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

தொடர்ந்து படங்களில் நடத்திக் கொண்டிருந்த இவர் திடீரென பிரபல நடிகர் அமிதாப்பச்சன் அவர்களுடைய மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு குழந்தைகளுக்கு தாயுமான நடிகை ஐஸ்வர்யா ராய் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

ஆனால், ஒரு கட்டத்தில் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியவர். சக நடிகர் ரன்பீர் கபூருடன் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் நெருக்கமான காட்சிகள் மற்றும் லிப்லாக் காட்சிகளில் நடித்து அதிர வைத்தார்.

இந்த படம் வெளியான பொழுது நடிகை ஐஸ்வர்யா ராய் விவாகரத்து செய்யப் போகிறார் போல் தெரிகிறது. கணவர் இருக்கும் பொழுது இன்னொரு நடிகருடன் அதிலும் தன்னைவிட வயது குறைவான நடிகருடன் படுமோசமான படுக்கை அறை காட்சிகளில் நடிப்பதெல்லாம் என்ன பழக்கம்..? என தெரியவில்லை என கூறப்பட்டது.

அந்த நேரத்தில் நடிகர் அபிஷேக் பச்சனின் அம்மாவுக்கும்.. அதாவது ஐஸ்வர்யா ராயின் மாமியாருக்கும் ஐஸ்வர்யா ராய்-கும் மிகப்பெரிய சண்டை முண்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. நெருப்பில்லாமல் புகையாது என்பது போல இதற்குப் பின்னால் இருந்த காரணம் என்ன..? என்று விசாரித்த பொழுது சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் தனக்கு தன்னுடைய திருமணத்தின் போது அபிஷேக் பச்சன் அணிவித்த மோதிரத்தை அணியாமல் வந்திருந்தார்.

திருமண நாளிலிருந்து தற்போது வரை அந்த மோதிரத்தை கழட்டாமல் இருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். இது குறித்து கேட்ட பொழுது இறுதிவரை நான் இதனை கழட்டவே மாட்டேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் தற்போது அந்த மோதிரத்தை அணியாமல் வந்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். அதனால் தான், இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்ற செய்தியை இணையத்தில் பறவ தொடங்கியது.

ஆனால் ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களில் கிளாமராக நடிப்பது பிடிக்காமல் தான் அபிஷேக் கொஞ்சம் அவருடைய சினிமா ஆசைக்கு தடை போட்டு இருக்கிறார். இதனால் தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது எனவும் நெருப்பில்லாமல் புகையாது. எனவே இருவருக்கும் ஏதோ பிரச்சனை இருக்கிறது போல தான் தெரிகிறது என இணைய பக்கங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பாலிவுட் ஊடக பிரபலங்கள் பலரும் இதனை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். ஆனால், அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா தரப்பில் இது விவாகரத்து குறித்து மறுப்போ அல்லது ஒப்புதலோ எதுவும் இதுவரை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version