உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முகத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!

இந்திய திரை உலகில் சுமார் 25 ஆண்டு காலமாக வலம் வரும் உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனக்கு என்று பல நாடுகளில் ரசிகர்களை பெற்றிருக்கும் ஒரு சிறந்த நடிகை.

இவர் தனது 21 ஆவது வயதில் அதாவது 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழில் இவரை கதாநாயகியாக அறிமுகம் செய்தது இயக்குனர் மணிரத்தினம்.

இவர் இயக்கிய இருவர் திரைப்படத்தில் 1997 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராயை நடிக்க வைத்தார். மேலும் இவர் தமிழில் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.

மேலும் ஜீன்ஸ் படத்தில் பிரசாந்துடன் இணைந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் ரஜினியோடு நடித்த எந்திரன், நடிகர் விக்ரமோடு நடித்த ராவணன் போன்ற திரைப்படங்கள் இவர்களது நடிப்புத் திறனுக்கு சான்றாக உள்ளது.

திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு பல நடிகர்கள் காதலர்களாக திகழ்ந்தார்கள் என்று அதிகளவு கிசுகிசுக்கள் வெளி வந்த வேளையில் 2017 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் 2-டில் இவருடைய அற்புத நடிப்பினை பார்த்து பலரும் பரவசமாகிவிட்டார்கள்.

இந்நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு நாள் போனால் ஒரு வயது போகும் என்று கூறுவார்கள். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ராய் 50 வயதை தொட்டுவிட்டார்.

50 வயதில் இவ்வளவு அழகாக காட்சியளிக்கிறாரே என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் அதிர்ச்சி தரக்கூடிய அளவு உலக அழகியின் முகம் எப்போது வெளிவந்து பலரையும் ஷாக் ஆகிவிட்டது.

தன்னுடைய அழகையும் இளமையையும் பராமரிக்க எண்ணற்ற சிகிச்சை முறைகளையும், அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்தினாலும் அதையும் மீறி முதுமை சரும சுருக்கங்களாய் மாறி வெளிப்படுவது இயற்கை தான்.

அந்த வகையில் ஐஸ்வர்யா ராயின் குளோசப் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தில் அவர் வயதுக்கு உரிய முகச்சுருக்கங்களை ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

இதனை அடுத்து உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முகத்தைப் பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் யாராக இருந்தாலும் இளமை, முதுமை என்பது தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version