உன்னை ஹீரோயின் ஆக்குனதே நான் தான்.. ஆனா நீ.. ஐஸ்வர்யா ராஜேஷை டார் டாராக கிழித்த இயக்குனர்..!

டஸ்கி ஸ்கின் அழகியான ஐஸ்வர்யா ராஜேஷ் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.

இவர் திரை உலகிற்கு வருவதற்கு முன்பு ஆரம்ப காலத்தில் பல்வேறு விதமான சங்கடங்களை வாழ்க்கையில் சந்தித்து இருக்கிறார். இவர் அம்மா தான் இவர்களை புடவை விற்று ஆளாக்கி இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ்…

ஐஸ்வர்யா ராஜேஷ் சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக முதல் முதலில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்தார். இதனை அடுத்து இவருக்கு கலைஞர் தொலைக்காட்சிகள் மானாட மயிலாட போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திய இவர் மானாட மயிலாட பட்டத்தை வென்றார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் நீதானா அவன் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக நாயகி ஆக அறிமுகப்படுத்தப்பட்டார். எனினும் அந்த படம் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தரவில்லை. இதனை அடுத்து அட்டகத்தி படத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை அமைத்துக் கொண்டார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் அக்கட தேசத்திலும் பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். இவர் நடிப்பில் தமிழில் ஃபர்ஹானா என்ற திரைப்படம் இறுதியாக வெளிவந்தது.

இயக்குனர் வீரபாண்டியன்..

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து இயக்குனர் வீரபாண்டியன் சற்று கோபமாக சில விஷயங்களை பேசி இருக்கிறார். அதாவது அவர்களும் இவர்களும் என்ற படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகப்படுத்தியது இயக்குனர் வீரபாண்டியன்.

இந்த படத்தில் வாய்ப்பு கேட்டு வரும் சமயத்தில் ஆட்டோவுக்கு கூட காசு கொடுக்க முடியாத நிலைமையில் தான் இருந்தார். மேலும் சற்று குண்டாக இருந்த அவருக்கு சரியாக ஆட வராது, நடிக்க தெரியாது இருந்தாலும் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தேன்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் பல மேடைகளில் என் பெயரைக் கூறி வந்த இவர் நல்ல முன்னேறிய நிலையில் நன்றி மறந்து விட்டார். இப்போது எல்லாம் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார்.மேலும் மனதில் பட்டதை பேசி வருவதாக இயக்குனர் கூறிய விஷயம் வைரலாகிவிட்டது.

இந்த விஷயம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவுகிறது. ஏற்றிவிட்ட ஏணியை மறந்து விடுவது வழக்கமான ஒன்று தான். எனினும் தான் தற்போது எந்த அளவு உயர்ந்து இருக்க காரணமாக இருந்த வாய்ப்புக் கொடுத்த வரை மறப்பது நாகரீகம் அல்ல என்பது போல் ஒவ்வொருவரும் அவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவரது கடுமையான விமர்சனத்திற்கு மறைமுகமாக ட்விட்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலடி கொடுத்திருக்கிறார். எனவே யாராக இருந்தாலும் நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version