திரிஷாவின் இந்த பாகத்தை தொட்டால் பிடிக்காது..! கூச்சல் போடுவா.. ரகசியம் உடைத்த பிரபல நடிகை..!

பொதுவாகவே மனிதர்களுக்கு வீக்னஸ் இருப்பது இயல்பான விஷயம் தான். அந்த வகையில் நடிகைகளுக்கும் மற்றும் நடிகர்களுக்கு வீக்னஸ் என்பது கண்டிப்பாக இருக்கும். தற்போது திரிஷாவின் வீக்னஸ் என்ன என்ற ரகசியத்தை பிரபல நடிகை உடைத்திருக்கிறார். அது பற்றிய விளக்கத்தை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

திரிஷா..

தமிழ், தெலுங்கு படங்களில் சக்கை போடு போடும் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா, லேடிஸ் சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக கருதப்படும் நடிகையாக விளங்குகிறார்.

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு சென்னை அழகியாக 1999 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்திற்காக பிலிம் பேர் விருதினை பெற்றிருக்கிறார். நடிகை ரம்யா கிருஷ்ணனை போல இவர் கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருவதோடு தனக்கு என்று ஓர் அசையாத இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். அண்மையில் விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் விஜய்க்கு லிப் லாக் கிஸ் கொடுத்து அசத்தியிருப்பார்.

இதனை அடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாக விளையாடி வரும் நடிகை திரிஷா அஜித்தின் விடாமுயற்சி, கமலின் தக்லைப் போன்ற படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

நயன்தாராவை போல பாலிவுட்டிலும் நடிக்க திரிஷா நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இவர் பாலிவுட் திரை உலகில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்த நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக வந்து மனதைக் கவர்ந்து ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து நடிகை நயன்தாராவிற்கு டப் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இவரைப் பற்றிய ரகசியம் ஒன்றினை பிரபல நடிகையான ஐஸ்வர்யா பகிர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா..

நடிகை ஐஸ்வர்யாவும் தமிழ் ,தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து அசத்து இருக்கிறார்.

பிரபல நடிகை லட்சுமியின் மகள் என்பதால் இவருக்கு திரையுலக அறிமுகம் எளிதில் அமைந்தது. எனினும் தனது அம்மாவைப் போல இவர் நடிப்பில் ஜொலிக்கவில்லை. நடிகை திரிஷாவும், இவரும் ராதா மோகன் இயக்கத்தில் வெளி வந்த அபியும் நானும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர்கள் ஒன்றாக நடிக்கும் போது திரிஷாவின் வீக்னஸ் என்ன என்பதை இவர் தெரிந்து கொண்டார். இது திரிஷாவின் வீக்னஸ் மட்டுமல்ல, ஐஸ்வர்யாவின் வீக்னஸும் கூட என அவர் கூறியிருப்பது பெருத்த ஆசிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அந்த இடத்தை தொட்டால் திரிஷா மட்டுமல்லாமல் ஐஸ்வர்யாவும் இணைந்து கூச்சல் போடுவாராம். இந்த விஷயத்தை தான் தற்போது நடிகை ஐஸ்வர்யா உடைத்துப் பேசி இருக்கிறார்.

மேலும் நடிகை திரிஷாவுக்கு முடியை தொட்டால் பிடிக்காதாம். அப்படி தொட்டுவிட்டால் உடனே கத்தி கூச்சல் போட்டு ஆர்ப்பாட்டம் செய்வார் என்ற ரகசியத்தை ஐஸ்வர்யா கூறியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இப்படி ஒரு விஷயம் உள்ளதா? என்று கேட்டிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த விஷயம் இணையத்தில் பெரும் அளவு பேசும் பொருளாகி ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version