ப்பா.. உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறிய AK..! – ரசிகர்கள் ஷாக்..! – வைரல் போட்டோஸ்..!

நடிகர் அஜித்குமார் தற்பொழுது விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்து இருக்கின்றன.

இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அசர்பைஜான் நாட்டில் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கே பருவநிலை மாறிக்கொண்டே இருப்பதால் படக்குழுவினர் காட்சிகளை படமாக்குவதில் சிரமத்தை சந்தித்து இருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் சரியான நேரத்தில் படப்பிடிப்பு பணிகள் எந்த தொய்வும் இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மட்டுமில்லாமல் நடிகர் அஜித்துடன் நடிகைகள் திரிஷா, ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நடிகர்கள் அர்ஜூன் மற்றும் பிக் பாஸ் ஆரவ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க நடிகர் அஜித் உடல் எடை குறைத்து ஒல்லியாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அஜித் குமாரா இது..? என்று வாயடைத்து போய் இருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version