திமுகவை எதிர்க்க தயாரான நடிகர் அஜித்குமார்..! வெற்றிமாறன் சொன்ன கதை இதுவா..?

நடிகர் அஜித் தற்பொழுது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தை நடித்த பிறகு யார் யாருடன் நடிக்கப் போகிறார் நடிகர் அஜித்குமார் என்ற தகவல் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் அஜித் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் அஜித்குமாரின் கால் சீட்டுக்காக காத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன் என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில், தற்போது வெற்றிமாறனுக்கு கால் சீட் கொடுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் அஜித் என்று கூறப்படுகிறது. இந்த படம் குறித்தான கதைக்களம் இதுதான் என சில தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

பொதுவாக வெற்றிமாறன் படங்கள் என்றாலே அவர் சொல்லக்கூடிய விஷயத்தை மிருதுவாகவோ அல்லது சுற்றி வளைத்தோ சொல்லாமல் நெற்றி பொட்டில் அடித்தார் போல பளிச்சென சொல்வதுதான் அவருடைய பானியாக இருந்து வருகிறது.

எந்த விஷயத்தையும் ஒழிவு மறைவு இல்லாமல் பார்க்கக்கூடிய ரசிகர்களுக்கு சுருக்கன உரைக்கும் விதமாக தன்னுடைய கருத்தை காட்சிகள் வாயிலாக கடத்துவார். இப்படி இருக்கும் வெற்றிமாறன் நடிகர் அஜித்குமார் அவர்களை இயக்கும்போது அந்த படம் எப்படி இருக்கும்.

நடிகர் அஜித்குமார் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தன்னுடைய முக பாவனைகள் மூலமே ஒட்டுமொத்த திரையரங்கையும் நொடியில் அதிர விடக்கூடிய ஒரு நட்சத்திரம்.

நடிகர் அஜித்குமாரின் ஸ்கிரீன் பிரசன்சை மிஞ்சுவதற்கு தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் இல்லை என்று கூறலாம். இதன் காரணமாகவே இன்று வரை கிங் ஆப் ஓப்பனிங் என்ற பட்டத்தை தனதாக்கி வைத்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்துடன் தன்னுடைய விஸ்வாசம் படத்தை வெளியிட்டு இருந்தார் நடிகர் அஜித்குமார். அந்த இக்கட்டான நேரத்தில் கூட விஸ்வாசம் திரைப்படம் முதல் நாள் அதிக வசூலை பெற்றது ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் விஸ்வாசம் திரைப்படம் அதிகமான வசூலை பெற்றிருந்தது.

சூப்பர் ஸ்டார் படத்துடன் மோதல் என்ற இக்கட்டான சூழலில் கூட தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்பதை உறுதிபடுத்தினார் அஜித்குமார்.

ஒரு பக்கம் சொல்ல வரக்கூடிய விஷயத்தை சுற்றி வளைக்காமல் நறுக்கென சொல்லக்கூடிய இயக்குனர் வெற்றிமாறன்… மறுபக்கம் தன்னுடைய முக பாவனைகள் மூலமாகவே திரையரங்கை அதிர வைக்கக்கூடிய அஜித்குமார்.

இருவரும் சேர்ந்து படம் எடுக்கப் போகிறார்கள் என்பதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. இதனை தொடர்ந்து இந்த படம் குறித்த தகவல்களும் இணையத்தில் வைரலாக தொடங்கி இருக்கின்றன.

அந்த வகையில் நடிகர் அஜித்குமார் வெற்றி மாறன் படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

அரசாங்க வேலையில் இருந்து அரசாங்கத்தில் நடக்கக்கூடிய குறைகளை தெரிந்து கொண்டு அதனை தடுப்பதற்காக தன்னால் முயன்ற வேலைகளை செய்து வருகிறார். இதனால் கடுப்பான அரசியல்வாதிகள் அஜித்குமாரை பணி நீக்கம் செய்கிறார்கள்.

வேலையை இழந்த பிறகு பத்திரிக்கையாளராக அரசின் குறைகளை சரி செய்யக்கூடிய ஒரு நபராக மாறுகிறார் நடிகர் அஜித்குமார் என்று கூறப்படுகிறது.

இந்த கதை, நிஜ உலகில் சமீப காலமாக திமுகவை எதிர்த்துக்கொண்டிருக்கும் பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கரின் கதை என்று பலரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். மேலும் கீழ்வெண்மனியில் நடந்த படுகொலை சார்ந்த சில தொடர்பும் இந்த படத்தில் இடம்பெறும் என தெரிகிறது என விவரம் அறிந்த வட்டாரங்கள் தகவல்களை தெரிவிக்கின்றன.

இப்படியான தகவல்கள் இணையத்தில் வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எங்கிற வைத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரம், நடிகர் அஜித்குமார் ஒரு படத்தில் நடித்து முடித்து அந்த படத்தின் ரிசல்ட் தெரியும் வரை அடுத்த படத்தில் ஒப்பந்தமாக மாட்டார் என்று அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், வெற்றிமாறன் இணைந்து படம் பண்ணுவாரா..? நடிகர் அஜித்குமார் இதுதான் கதையாக இருக்குமா..? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் ஏற்கனவே தன்னுடைய கதையை படமாக்கினால் இயக்குனர் வெற்றிமாறனைத் தான் தேர்வு செய்வேன் அவருக்கு மட்டும்தான் என்னுடைய கதையை படமாக்குவதற்கு தகுதி இருக்கிறது என நம்புகிறேன் எனக் கூறியிருந்தார்.

மறுபக்கம் நடிகர் அஜித்குமாருக்கும் திமுகவுக்கும் இருக்கக்கூடிய வாய்க்கா தகராறு என்னவென்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version