“தவறான உறவில் இருக்கார்.. வெளிய வந்துருச்சு..” – பிரபல நடிகரை விளாசிய நடிகை ஆல்யா மானசா..!

நடிகை ஆல்யா மானசா சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் குறித்தும்.. அவர் வெளியிடக்கூடிய தகவல்கள் குறித்தும்.. தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, பயில்வான் ரங்கநாதன் வெளியிடக்கூடிய தகவல்கள் என்னை பொறுத்தவரை தவறானது.

நான் சினிமா துறையில்.. மீடியா துறையில் இருக்கிறேன் என்பதற்காக சினிமா துறையினருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. பொதுவாக கூறுகிறேன். ஏனென்றால் சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா பணி இடங்களிலுமே இப்படியான அத்துமீறல்கள், தவறான தொடர்புகள், காதல்கள், ப்ரேக்-அப் என அனைத்துமே நடக்கிறது.

சினிமா துறையில் மட்டும்தான் இது நடக்கிறதா என்று கேட்டால்.. நிச்சயமாக கிடையாது. அனைத்து துறைகளிலுமே இது நடக்கிறது. அனைத்து துறைகளிலுமே பெண்களுக்கு எதிரான விஷயங்கள் நடக்கத்தான் செய்கிறது.

ஆனால், சினிமா துறையில் இருப்பவர்கள் ஏதாவது செய்து விட்டால் அது பூதாகரமாக பேசப்படுகிறது. பொதுவெளியில் விவாதிக்கப்படுகிறது. ஒருவருக்கு ஏற்பட்டுள்ள தனிப்பட்ட தர்ம சங்கடமான சூழ்நிலையை பொதுவெளியில் அனைவருக்கும் முன்பும் வைக்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் கிடையாது.

தவறான உறவில் இருக்கார்..

அப்படி வைக்கப்படுவதால் அந்த தர்ம சங்கடமான சூழ்நிலையை அனுபவித்த அந்த நபர் மேலும் பாதிப்படைகிறார். ஒருவேளை சினிமாத்துறை இல்லாமல் வேறு ஏதேனும் துறையில் இப்படி யாரவது ஒருவர் தவறான உறவில் இருக்கார்.. அது வெளியே வந்துவிட்டது.. என்றால் அவர்களைப் பற்றிய ரகசியங்களை பொதுவெளியில் எடுத்து பேசினால் யாராவது ஒத்துக்கொள்வார்களா..?

கண்டிப்பாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதுபோலத்தான் சினிமா துறையில் இருப்பவர்களும் மனிதர்கள் தான்..  எங்களுக்கும் மனசு இருக்கிறது. எனவே தனிப்பட்ட நடிகர்கள் நடிகைகள் பிரபலங்கள் பற்றிய ரகசியமான தகவல்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது தான் சரியானது.

ஆனால் அவர் பேசுகிறார். என்னைப் பொறுத்தவரை பயில்வான் ரங்கநாதன் பேசுவது தவறு என விளாசி இருக்கிறார் நடிகை ஆல்யா மானசா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version