ஜாலியோ ஜிம்கானா.. துபாயில் ஆல்யா மானசா கும்மாளம்..!! – வைரல் போட்டோஸ்..!

பெரிய திரையில் நடித்த நடிகர்கள் அவர்களோடு இணைந்து நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதைப் போல, சின்னத்திரையில் ஜோடியாக சீரியல்களில் நடித்தவர்கள் தற்போது நிஜ வாழ்விலும் ஜோடிகளாக மாறி இருக்கிறார்கள்.

அந்த வகையில் மிகச்சிறந்த ஜோடிகளாக திகழும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா பற்றி உங்களுக்கு அறிமுகமே அவசியம் இல்லை. இவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் காதல் மொழியான பாப்பு என்ற வார்த்தை ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ரொமான்ஸ் வார்த்தைகளில் ஒன்றாகி உள்ளது.

மேலும் ஆல்யா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் நடித்து இருந்தார். அப்போது தன்னோடு ஜோடியாக நடித்த சஞ்சீவோடு நட்பு ஏற்பட்டு அது இறுதியில் காதலில் முடிந்தது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

தனது இரண்டாவது பிரசவத்திற்காக ராஜா ராணி சீசன் 2-ல் இருந்து விலகிய ஆலியா மானசா தற்போது தனது உடல் எடையை வெகுவாக குறைத்து பழைய நிலைக்கு திரும்பியதை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கும் டிஆர்பி-யில் நல்ல இடம் கிடைத்து உள்ளது.

மேலும் இந்தத் தொடரில் ஆல்யா மானசா மற்றும் ரிஷியின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகி இருப்பதால் மக்கள் அனைவரும் இனியா சீரியலை விரும்பி பார்த்து வருகிறார்கள். அத்தோடு இதில் ஆல்யா மானசாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருப்பதாக இல்லத்தரசிகள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்கள் தனியாக ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்கள். இதில் தங்கள் குழந்தைகளின் சேட்டைகளை அவ்வப்போது பதிவிடுவார்கள்.

இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா தன் குடும்பத்தோடு துபாய்க்கு சென்று இருக்கிறார். அங்கு உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தோடு குதூகலமாக கழித்த நிமிடங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசக்கூடிய வகையில் இருப்பதாக அனைவரும் கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள். மேலும் இதில் ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக தெரிவதாக கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version