நேச்சுரல் ப்யூட்டி.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. அசர வைக்கும் அம்ரிதா ஐயர்..!

இன்றைய இளம் நடிகைகளில் பார்த்தவுடன் ஜொள்ளு விட வைக்கும் அழகான நடிகைகளில் அம்ரிதா ஐயர் மிக முக்கியமானவர்.

அம்ரிதா ஐயர் பிறந்தது சென்னையில் என்றாலும் வளர்ந்தது, படித்தது எல்லாம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில்தான். துவக்கத்தில் மாடலிங் துறையில் இருந்த அம்ரிதா ஐயர் பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.

அதன்பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து தனது கலையுலக பயணத்தை துவங்கினார்.

அம்ரிதா ஐயர்..

கடந்த 2014ம் ஆண்டில், அம்ரிதா ஐயர் லிங்கா படத்தில் நடித்தார். அதே ஆண்டில் தெனாலி ராமன் படத்திலும், 2016ம் ஆண்டில் போக்கிரி ராஜா என்ற படத்திலும் நடித்த அவர், அதே ஆண்டில் தெறி படத்திலும் நடித்தார்.

நான்கு படங்களில் நடித்தாலும் சின்ன சின்ன கேரக்டர்களில், பெயர் இல்லாத ரோல்களில் அவர் நடித்திருந்தார். கதாநாயகி தோழியாக, அல்லது ஏதேனும் ஒரு சிறு பாத்திரத்தில் அவர் திரையில் தோன்றினார்.

கடந்த 2018ம் ஆண்டில் விஜய் ஜேசுதாஸ் நடித்த படை வீரன் படத்தில், முதல் முறையாக கதாநாயகியாக நடித்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

அடுத்து காளி படத்தில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். பிகில் படத்தில், கோச் ஆக விஜய் இருக்கும் கால்பந்தாட்ட அணிக்கு தலைவியாக நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அம்ரிதா ஐயர்.

வணக்கம்டா மாப்ளே, லிப்ட், காதலுடன் காபி என தமிழ் படங்களிலும் தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார் அம்ரிதா ஐயர்.

அசர வைக்கும் அழகு..

தமிழ் சினிமா நடிகைகளில் சிலருக்கு மட்டுமே மிக அழகான லட்சணமான முகமும், வாளிப்பான தேகமும், பார்த்தவுடன் மனதில் தங்கி விடும் அழகும் நிறைந்திருக்கும்.

அப்படிப்பட்ட அசர வைக்கும் அழகில் இருக்கும் அம்ரிதா ஐயர், அடிக்கடி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது வலைதள பக்கங்களில் அப்டேட் செய்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

அந்த வகையில், இப்போது நேச்சுரல் ப்யூட்டியாக, பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே, என தோன்றும் விதமான புகைப்படங்களை தந்து, இளசுகளின் ரத்தத்தில் சூடேற்றி இருக்கிறார் நடிகை அம்ரிதா ஐயர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version