உடல் ரீதியாக கொடுமை.. மன ரீதியாக வன்மம்.. முன்னாள் காதலன் குறித்து ஆண்ட்ரியா ஓப்பன் டாக்..!

ஆண்ட்ரியாவுக்கு பாடகி, பின்னணி குரல் கலைஞர், நடிகை என்று 3 அடையாளங்கள் உள்ளது. இந்த மூன்றிலுமே அவர் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி முத்திரை பதித்தவர்.

அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா, ஆதவன் படத்தில் ஏனோ, ஏனோ, வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க கற்க, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா போன்ற பாடல்களை பாடியவர் ஆண்ட்ரியா தான்.

அதே போல் ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கும், வேட்டையாடு விளையாடு படத்தில் கமாலினி முகர்ஜிக்கும், நண்பன் படத்தில் இலியானாவுக்கும் பின்னணி குரலாக ஒலித்தது ஆண்ட்ரியா குரல்தான்.

அதுமட்டுமின்றி நடிகையாகவும் பல படங்களில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக பச்சைக்கிளி முத்துச்சரம், வட சென்னை, ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை 3, விஸ்வரூபம் என பல படங்களை சொல்லலாம்.

மங்காத்தா, உத்தம வில்லன், என்றென்றும் புன்னகை, பிசாசு 2 உள்பட மலையாளத்திலும் சில படங்களில் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார்.

ஆண்ட்ரியா…

பாடகியாக இருந்த போது ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் அனிரூத்தை காதலித்து இருக்கிறார். அவர்கள் நெருக்கமாக முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படங்கள் கூட ஒருமுறை வெளியாகி வைரலானது.

ஆனால் நீண்ட நாட்கள் அவர்களது காதல் நீடித்திருக்கவில்லை. மிக விரைவிலேயே பிரேக்கப் ஆகிவிட்டது.

இதையடுத்து ஆண்ட்ரியா இன்னொருவருடன் ரிலேஷன்சிப்பில் இருந்த நிலையில், அதுவும் பிரேக்கப் ஆனதாக தெரிய வந்துள்ளது.

முன்னாள் காதலன்..

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ஆண்ட்ரியா, கடந்த சில ஆண்டுகளில் திருமணம் செய்துக்கொண்ட சிலர் மகிழ்ச்சியாக இல்லை.

திருமணம் செய்யாமல் பலர், மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

நான் காதலில் இருந்த போது எனது முன்னாள் காதலன், என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் துன்புறுத்தினார். அதனால் நான் கடுமையான மன உளைச்சலில் தவித்தேன்.

அதனால்தான், தமிழ் சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தேன், என்று வருத்தமுடன் கூறியிருக்கிறார்.

உடல் ரீதியாக கொடுமை, மன ரீதியாக வன்மம் தந்த வலிகள் பற்றி முன்னாள் காதலன் குறித்து ஆன்ட்ரியா ஓப்பனாக கூறியிருக்கிறார்.

ஆண்ட்ரியாவை இந்தளவுக்கு கொடுமைப்படுத்திய அவரது முன்னாள் காதலன் யாராக இருக்கும் என்பதுதான் சமூக வலைதளங்களில் பலரது கேள்வியாக உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version