இதனால் ஆண்டிரியாவை பிரிந்தேன்.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த அனிருத்..!

தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு ஸ்டெயில்லில், படங்களுக்கு இசை அமைப்பதோடு நின்று விடாமல் பாடலையும் பாடி சிறுவயதிலேயே வெற்றிகளை எட்டிப்பிடித்த இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் ஆரம்ப நாட்களில் ரஜினியின் பெண் ஐஸ்வர்யாவின் குறும் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

இதனை அடுத்து ஐஸ்வர்யா இயக்கிய தனுஷின் திரைப்படமான 3 திரைப்படத்தில் இவர் இசை அமைத்திருந்த விதம் அனைவரையும் கவர்ந்தது. இவரின் இசையில் வெளி வந்த ஒய் திஸ் கொல வெறி பாடல் உலக அளவில் கிட் அடிக்க அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு அடுத்தபடியாக தற்போது திரை இசையால் கோலோச்சி வரும் அனிருத் பற்றி உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இளைஞர்களை கவரக்கூடிய வகையில் இவரது ஏழு ஸ்வரங்களும் மாஸாக மனதை தொடக்கூடிய வகையில் இருக்கும்.

தென்னிந்திய சினிமாவின் ட்ரெண்டிங் ஆன இசையமைப்பாளராக திகழக்கூடிய இவரைப் பற்றி கிசுகிசுகளுக்கு பஞ்சமே இல்லை. அந்த அளவு இவரது காதல் சேட்டைகள் பற்றி நாள் ஒரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் கிசுகிசுக்கள் எழுந்த வண்ணம் இருக்கும்.

அந்த வகையில் இவர் அண்மையில் பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அந்த பேட்டியில் இவரது முன்னாள் காதலி பற்றிய விஷயத்தையும், அவரை ஏன் பிரிந்தார் என்பது பற்றிய முக்கிய கருத்தையும் வெளிப்படையாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இவர் தனக்கு 19 வயது இருக்கும் போது பாடகியாகவும் பன்முக திறமையை கொண்ட நடிகையாகவும் விளங்கும் ஆண்ட்ரியாவை காதலித்து பல்வேறு இடங்களுக்குச் சென்றதோடு மட்டுமல்லாமல் டேட்டிங் செய்து இருக்கிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரை பற்றிய தகவல்கள் இணையத்தில் புகைப்படங்களோடு வெளி வந்த பின்னர் திடீர் என்று இவர்கள் காதல் பிரேக்கப்பில் முடிந்து விட்டது.

அதைப் பற்றி விளக்கத்தை தந்த இசை அமைப்பாளர் அனிருத், தற்போது யாரையும் காதலிக்கவில்லை. ஆனால் இதற்கு முன்பு நான் காதலித்தேன் என்பதை ஒப்புக்கொண்டதோடு அந்த காதலி வேறு யாரும் இல்லை நடிகை ஆண்ட்ரியா என்பதையும் மறக்காமல் கூறியிருக்கிறார்.

தன்னைவிட வயதில் அதிகமான ஆண்ட்ரியாவை காதலித்ததினால் அந்த வயதே அவர்களது காதலுக்கு தடையாக அமைந்தது. இவர் மீது ஏன் காதல் ஏற்பட்டது என்பதை இது வரை தன்னால் ரிவ்யூ செய்ய முடியவில்லை என்ற நிலையையும் தெளிவாகக் கூறியிருக்கிறார்.

ஒருவேளை தனக்கு வயது குறைவாக இருந்ததன் காரணத்தால் தான் அதை கண்டுபிடிக்க முடியவில்லை, என்பதையும் வெளிப்படையாக சொன்ன அனிருத் தான் தற்போது காதலிக்க ஒரு காதலியை தேடி வருவதாகவும் சொல்லியிருக்கிறார்.

திரை உலகை பொறுத்த வரை தன்னை விட வயதில் மூத்த பெண்களையும், ஆண்களையும் திருமணம் செய்து கொள்வது சகஜமாகிவிட்ட நிலையில் இவரது காதலி தன்னை விட ஆறு வயது மூத்தவர் என்ற காரணத்தால் பிரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version