கோழி முட்டை போட்டிருச்சா..? குழந்தை இல்லாதது குறித்து அனிதா சம்பத் பதில்..!

திருமணம் செய்து கொண்டவர்கள் விரைவில் பிள்ளை பேரு கிடைக்கவில்லை என்றால் எவ்வளவு சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தி இருக்கும் Poli Couple வீடியோவை பார்த்து கமெண்ட் செய்திருக்கும் அனிதா சம்பத் என்ன பதில் தந்திருக்கிறார் என்பதை குறித்து பார்க்கலாம்.

சமுதாயத்தில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படி கருதப்படும் இந்த திருமணம் நடந்து முடிந்த உடனேயே குழந்தையை எதிர்பார்த்து பலரும் காத்திருப்பார்கள்.

அந்த வகையில் குழந்தை தாமதமாக நடக்கும் தம்பதிகளுக்கு அக்கம் பக்கம் மட்டுமல்லாமல் உறவினர்களிடம் இருந்தும் அதிகளவு பிரஷர் ஏற்படும்.

கோழி முட்டை போட்டுருச்சா..?

இந்த பிரஷர் காரணத்தால் தம்பதிகள் இடையே கடுமையான மன அழுத்தம் ஏற்படும். இதை புரிந்து கொள்ளாமல் அந்த ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப கேட்டு வரும் அனைவருக்கும் கோழி முட்டை போட்டு போட்டதா? என்ற ரீதியில் இன்ஸ்டாகிராமில் இயங்கி வரும் Poli Couple தம்பதியினர் சரியான பதில் அடியை தந்திருக்கிறார்கள்.

இதை சரி என்று சொல்வது போல தற்போது செய்தி தொகுப்பாளராகவும் சன் டிவியின் தொகுப்பாளராகவும் விளங்கிய அனிதா சம்பத் கூறியிருக்கும் பதிலானது பலர் மத்தியிலும் பேசப்படக்கூடிய பேசும் பொருளாகிவிட்டது.

அனிதா சம்பத்தை பொருத்த வரை ஆரம்ப நாட்களில் சின்னத்திரைகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து இருந்தாலும் தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் சன் டிவியில் வேலை செய்வதற்கு முன்பே பாலிமர் டிவி, நியூஸ் 7, தமிழன் போன்ற சின்னத்திரைகளில் தொகுப்பாளினியாக விளங்கியவர்.

இவர் நடிப்பில் வெளி வந்த சர்க்கார், சேவல் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் செய்தி வாசிப்பாளராக நடித்திருக்கிறார். இதனை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் இவர் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

திரைத்துறையில் நடிக்கும் நடிகைகளுக்கு எப்படி ஒரு ரசிகர் படை இருக்குமோ அது போலவே இவருக்கும் ஒரு ரசிகர் படை உள்ளது. இதற்குக் காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு தமிழ் திரைத்துறை ரசிகர்கள் மற்றும் பலரும் ஆதரவு தெரிவித்து இருந்தார்கள்.

குழந்தை எப்போ..?

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இயங்கி வரும் Poli Couple என்ற தம்பதியினர் பகிர்ந்து இருக்கும் வீடியோவானது பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த வீடியோவில் பக்கத்து வீட்டு ஆண்டியிடம் உங்களுடைய கோழி முட்டை போட்டு விட்டதா? என தினமும் சென்று கேட்கிறார்கள். இந்நிலையில் பொறுமை இழந்த அந்த ஆன்ட்டி சற்று கடுப்பாகி தினமும் எப்படி முட்டை போடும். அதற்கு எப்போது முட்டை வருகிறதோ அப்போது தானே போடும் என கூறுவார்.

இதனைக் கேட்டுக் கொண்ட அந்த Poli Couple தம்பதிகள் இதே போல தானே நாங்களும் கல்யாணம் ஆனது முதல் எப்போது குழந்தை பிறக்கும்? எப்போது குழந்தை பிறக்கும்? என்று கேட்டு எல்லோரும் நச்சரித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

எங்களுக்கும் எப்போது பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற யோசனை இருக்காதா? அப்போது தானே பெற்றுக் கொள்வோம் என பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்த பிரபல நடிகை அனிதா சம்பத் இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது என்று கமெண்ட் செய்திருக்கிறார்.

மேலும் இந்த விஷயம் தற்போது வைரலாக பரவி வருவதோடு குழந்தை பெற்றுக் கொள்ளாத தம்பதிகளின் வலி எப்படி இருக்கும் என்பதை அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பது போல உள்ளது எனவே யாரும் இனிமேல் அதுபோன்ற தம்பதிகளிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம் என்று சிம்பாலிக்காக உணர்த்தி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version