கல்யாணம் பண்ணி அமெரிக்கால செட்டில் ஆனேன்.. அத மறக்க நினைக்கிறேன்.. அஞ்சலி ஓப்பன் டாக்..!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் நடிகை அஞ்சலி.

அதன் பிறகு இவர் நடித்த அங்காடித்தெரு திரைப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து நடிகை அஞ்சலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் சுமார் 20 திரைப்படங்கள் வரை நடித்திருந்த அஞ்சலி திடீரென நடிப்பை ஓரம் கட்டி விட்டு ஹைதராபாத்தில் செட்டிலானார்.

சில இடைவேளைக்கு பிறகு ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் நாயகியாக களமிறங்கிய இவர் அதன் பிறகு நடிப்பில் முழு கவனத்தில் தொடங்கினார்.

இதனை தொடர்ந்து நாடோடிகள் 2, பாவ கதைகள், நிசப்தம், FALL, நவரசா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலி எனக்கும் நடிகர் ஜெய்க்கும் காதல் இருக்கிறது என்று பல கிசுகிசுக்கள் ஊடகங்களில் பரவி வருகிறது.

அதற்கு ஏற்றார் போல பலூன் திரைப்படத்தில் நானும் அவரும் ஜோடியாக நடித்திருந்தோம். ஆனால் நான் ஜெய்யை காதலிக்கிறேன் என்று எந்த இடத்திலும் சொன்னது கிடையாது.

எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே என்னை பற்றி எழுத வேண்டும்.. யாருடன் என்னை இணைத்து எழுத வேண்டும் என்று அவர்களே முடிவு செய்துவிடுகிறார்கள்.

இதற்கு நான் எப்படி பதில் கொடுக்க முடியும் என்று பேசியிருந்தார். தொடர்ந்து பேசி அவரிடம் உங்களைப் பற்றி வந்த மோசமான கிசுகிசு என்றால் எதை கூறுவீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அஞ்சலி, ஒருமுறை நான் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனேன் என்று கிசு கிசு வெளியானது.

இதனை பார்த்து எனக்கு பயங்கரமாக சிரிப்பு வந்தது. எனக்கே தெரியாத என்னுடைய திருமண செய்தியை படித்ததும் சிரித்து விட்டேன். அதனை மறக்க நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் அஞ்சலி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version