பீரியட்ஸ் நேரத்துல தான் இதை பண்ணுவாங்க.. ஷூட்டிங் ஸ்பாட் ரகசியம் உடைத்த அஞ்சலி..!

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் மிக நல்ல நடிகையாக பல படங்களில் தன்னை வெளிப்படுத்தியவர்.

இன்னும் பல படங்களில் நடித்து, அவர் இன்னும் பல உயரங்களை தொட்டிருக்க வேண்டியவர் என்ற நிலையில், சரியான கேரக்டர்கள் தொடர்ந்து அமையாததால், ஒரு கட்டத்தில் கவர்ச்சி நாயகியாக அவர் மாறி விட்டார்.

ராம் இயக்கத்தில், கற்றது தமிழ் படத்தில் ரசிகர்களின் கவனம் பெற்றவர் அஞ்சலி. ஆனால் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்றுத் தந்த படங்கள் அங்காடி தெரு மற்றும் எங்கேயும் எப்போதும் படங்கள்தான்.

இந்த படங்களில் மிக அற்புதமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை அசர வைத்தவர் அஞ்சலி. குறிப்பாக அங்காடி தெரு படத்தில், பல காட்சிகளில் வயதுக்கு மீறிய ஒரு ரியாக்‌ஷனை காட்டி நல்ல நடிகை என அஞ்சலி நிரூபித்திருப்பார்.

அஞ்சலி

துவக்கத்தில் விளம்பர படங்களில் நடித்த அஞ்சலி, பிறகு தெலுங்கு படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் அறிமுகமானார். எனினும் இப்போதும் சில முக்கிய விளம்பரங்களில் அஞ்சலி நடித்துக்கொண்டு இருக்கிறார்.

மங்காத்தா, ரெட்டச்சுழி, தூங்கா நகரம், கருங்காலி, தம்பி வெட்டேத்தி சுந்தரம், கலகலப்பு, சேட்டை, இறைவி, தரமணி, மாப்ள சிங்கம் என பல படங்களில் நடித்த அஞ்சலி இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நடிகர் ஜெய் உடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் அஞ்சலி சேர்ந்து வாழ்வதாக கூறப்பட்டது.

பிறகு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டதாகவும் கூறப்பட்டது.

எனக்கே தெரியாமல், எனக்கு திருமணம் நடந்தது குறித்து நான் சில நேரங்களில் அழுதிருக்கிறேன் என்றும் அஞ்சலி முன்பு ஒருமுறை கூறியிருந்தார்.

பீரியட்ஸ் நேரம்

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அஞ்சலி, சில பிரைவசியான விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார்.

எனக்கு எப்போதெல்லாம் பீரியட்ஸ் நேரம் வருகிறதோ அப்போதுதான் மழையில் நனைந்தபடி நடிக்கக்கூடிய காட்சிகள் வரும்.

 

ஈரமான உடைகளை அணிந்து கொண்டு நடிக்க கூடிய காட்சிகள், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய காட்சிகள் நடிக்க வேண்டியது வரும்.

கடினமான நடன அசைவுகள் இருக்கக்கூடிய காட்சிகளை எல்லாம் அப்போதுதான் வைப்பார்கள்.இது எனக்கு ஒரு விதமான கடுப்பாக இருக்கும்.

இயக்குநரிடம் சொல்வேன்

அதனால் என்னுடைய பீரியட்ஸ் நேரங்களில் இயக்குனரிடம் இப்படியான காட்சிகள் எல்லாம் குறிப்பிட்ட நாட்களுக்கு எடுக்க வேண்டாம் என்று தன்மையாக கூறி விடுவேன் என, கூறியிருக்கிறார் நடிகை அஞ்சலி.

திரையில் தோன்றும் நடிகைகளுக்கும் இதுபோன்ற பிரைவசியான பிரச்னைகள் இருக்கும்.

அதுவும் பீரியட்ஸ் நேரத்துல தான் இந்த மாதிரியான ஹீரோயின்களுக்கு சிரமம் தருகிற மாதிரியான காட்சிகளை எடுப்பார்கள்.

பெண்கள் என்பதை உணராமல் இந்த மாதிரி பண்ணுவார்கள் என்று ஷூட்டிங் ஸ்பாட் குறித்த ரகசியத்தை உடைத்திருக்கிறார் நடிகை அஞ்சலி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version