படுக்கையறை காட்சிகளில் நடிகர்கள் இதை செய்வார்கள்.. ஓப்பனாக கூறிய அஞ்சலி..!

நடிகை அஞ்சலி படப்பிடிப்பு தளங்களில் நடிகர் மற்றும் நடிகைகள் ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளின் போது எப்படி நடந்து கொள்வார்கள்…? என்ற கேள்விக்கு சமீபத்தில் பதில் கொடுத்து இருக்கிறார்..

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலியிடம் படப்பிடிப்பின் போது ரொமான்ஸ் காட்சிகள் என்றால் ஹீரோவும் ஹீரோயினும் ஒரே குஷியாக இருப்பார்கள் ஜாலியாகி விடுவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.

ஆனால், உண்மை என்ன..? அந்த சூழ்நிலை எப்படி இருக்கும்..? அந்த நேரத்தில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்..? என்று நடிகை அஞ்சலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அஞ்சலி திரைப்படங்களில் நாங்கள் அழுவது போன்று கத்துவது கதறுவது அனைத்துமே அந்த குறிப்பிட்ட கதாபாத்திரம் செய்யக் கூடியது தவிர நாங்கள் செய்வது கிடையாது.

நாங்கள் அழ மாட்டோம்.. நாங்கள் கதற மாட்டோம்.. அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் தான் அழுகிறது அந்த கதாபாத்திரம் தான் கதறுகிறது அதுபோலத்தான் அனைத்து காட்சிகளும்.. ரொமான்ஸ் காட்சிகளும் அப்படித்தான்.. அந்த கதாபாத்திரங்கள் ரொமான்ஸ் செய்கின்றன.

ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது பல நேரங்களில் இது நெருடலான விஷயமாகவும் இருக்கும். ஏனென்றால் உடன் நடிக்கக்கூடிய நடிகர் தன்னை பற்றி என்ன நினைப்பார்..? ஏதாவது தவறாக நினைத்து விடுவாரா..? என்று ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நடிகர்களுக்கு மட்டுமல்ல நடிகைக்கும் இது பொருந்தும். காதலன் காதலி ரொமான்ஸ் செய்கிறார்கள் என்றால் இருவருக்குள்ளும் இருக்கும் புரிதல் வேறு. ஆனால், ஒரு நடிகர் எனும் பொழுது ஒரு புது நபர் அவரைப் பற்றிய தகவல்கள் அவருடைய தனிப்பட்ட குணாதிசயம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

அப்படி இருக்கும் பொழுது அவர்களுடன் இப்படியான ரொமான்ஸ் காட்சிகள் மொத்த காட்சிகள் நடிக்கும் போது ஒருவித நெருடலாகவே இருக்கும். இதுதான் படப்பிடிப்பு தளத்தில் நடக்கக்கூடிய உண்மை.

ஆனால் ரசிகர்கள் மத்தியில் ரொமான்ஸ் காட்சி என்றாலே நடிகைகள் நடிகர்கள் ஜாலியாக இருக்கிறார்கள் என்று ஒரு எண்ணம் இருப்பது அவர்களுடைய இயல்பு. அதிலும், தவறு ஏதும் சொல்ல முடியாது. உண்மை என்னவென்றால் நான் சொல்லியதுதான் என கூறியிருக்கிறார் நடிகை அஞ்சலி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version