“ஒல்லியா இருந்தால் அந்த விஷயம் உச்சம்.. ஆனால்..” வெளிப்படையாக கூறிய நடிகை அஞ்சலி..!

ஆரம்ப காலத்தில் தெலுங்கு விளம்பரங்களில் நடித்த நடிகை அஞ்சலி தெலுங்கு படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் சீரியல் நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை அஞ்சலி..

அந்த வகையில் இவர் 2007 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். எனினும் இந்த படத்தின் மூலம் இவருக்கு பெரிய அளவு ரீச் கிடைக்கவில்லை.

ஆனாலும் ஆனந்தி என்ற கேரக்டரை பக்காவாக செய்ததுக்காக ஃபிலிம் ஃபேர் விருதினை இவர் பெற்றிருக்கிறார். இதனை அடுத்து 2010-ல் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து பல்லாயிரக்கணக்கான இளசுகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவரது நடிப்பு திறன் பெருவாரியான ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டதோடு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து இவர் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி வந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்ததை அடுத்து இருவருக்கும் இடையே காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் எழுந்து வந்தது.

இந்த சூழ்நிலையில் இருக்கின்ற பெரும் போட்டியை ஈடுகட்ட கூடிய வகையில் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரக்கூடிய இவர் ஜெயுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்த சமயத்தில் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்த காரணத்தினால் உடல் எடை அதிகமாக போட்டுவிட்டார்.

ஒல்லியா.. அந்த விஷயம் உச்சம்..

ஏற்கனவே சினிமா வாய்ப்புகளில் கவனம் செலுத்தாத நிலையில் உடல் எடையும் அதிகரித்ததின் காரணமாக முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைப்பது சற்று குறைவானது.

இதனை அடுத்து தன் நிலையை உணர்ந்து கொண்ட நடிகை அஞ்சலி நடிகர் ஜெயை விட்டு பிரிந்து மீண்டும் திரைப்படங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கக்கூடிய பணிகளிலும் துரிதமாக களம் இறங்கினார்.

இதனால் தற்போது இவர் உடல் எடை மிக நன்றாக குறைந்து போய்விட்டது. பார்ப்பதற்கு படு யங்காக காட்சி அளிக்க கூடிய இவர் தன் உடல் எடை குறைந்த விஷயம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இவர் உடல் எடை கூடி பருமனாக இருந்த சமயத்தில் அவரால் சோர்வாக தான் இருக்க முடிந்தது என்றும் சுறுசுறுப்பு அதிக அளவு இல்லை என்று அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

மேலும் அவர் ஒல்லியாக இருப்பதால் எனக்கு ஒரு விஷயம் எளிமையாக நடக்கிறது. அது என்னவென்றால் என்னுடைய பெட்டியில் நிறைய ஆடைகளை என்னால் வைத்துக்கொள்ள முடிகிறது. அது மட்டுமல்லாமல் எனது உடல் சக்தி உச்சத்தில் இருப்பதை என்னால் உணர முடிகிறது என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.

மேலும் உடல் பருமனாக இருந்த போது சுறுசுறுப்பு இல்லாமல் இருந்த நான் தற்போது உச்சகட்ட சுறுசுறுப்பை உணர முடிகிறது. எனவே உடல் பருமனாக இருந்திருந்தால் என்னால் இதையெல்லாம் அனுபவித்து இருக்க முடியாது என நடிகை அஞ்சலி பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் ஒல்லியாக இருந்தால் அந்த விஷயம் உச்சமா? என்று இணையங்களில் நடிகை அஞ்சலி பேசிய விஷயத்தை பரபரப்பாக பேசக்கூடிய பேசும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version