“நான் ஒன்னும் அதை உருவாக்கல..” முதல் காதலனை பிரிந்தது பற்றி ரகசியம் உடைத்த அஞ்சலி..!

நடிகை அஞ்சலி முதன்முறையாக தன்னுடைய முதல் காதலன் நடிகர் ஜெய்யை பிரிந்தது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் கொடுத்து இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அஞ்சலியிடம் ஜெய் குறித்தான கேள்விகள் எழுப்பப்பட்டது. எப்போது பார்த்தாலும் உங்களையும் ஜெய்யையும் தொடர்பு படுத்தி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

ஜெய்யால்தான் உங்களுடைய சினிமா வாழ்க்கை வீணாகிவிட்டது என்று கூறுகிறார்கள்.. மறுபக்கம் உங்களால் தான் ஜெய்யின் சினிமா வாழ்க்கை வீணாகி விட்டது என்று கூறுகிறார்கள்.

இப்படி தொடர்ச்சியாக ஜெய் ஜெய் என்று உங்களை சுற்றி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. இது உங்களுக்கு அசவுகரிமாக இல்லையா..? என்னதான் உங்களுக்கும் ஜெய்க்கும் பிரச்சனை..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை அஞ்சலி. நான் ஜெய்யுடன் உறவில் இருக்கிறேன் என்று எங்கேயும் அறிவிக்கவில்லை. சினிமா துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். யாருடனும் என்னை தொடர்பு படுத்தி எழுத வேண்டும் என்பது எழுதுவவர்களுடைய சிந்தனை தான்.

மற்றபடி நான் இன்னாருடன் வாழ்கிறேன் என்று இதுவரை எங்கேயும் நான் அறிவித்தது கிடையாது. இந்த செய்தியை நான் உருவாக்கவில்லை. எனவே இதற்கு நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒருவேளை நான் ஜெய்யுடன் உறவில் இருக்கிறேன்.. காதலில் இருக்கிறேன் என்று அறிவித்திருந்தால்.. என்னிடம் தற்பொழுது ஜெய்யுடன் உறவு எப்படி இருக்கிறது..? என்று கேள்வி எழுப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது.

ஆனால், இதுநாள் வரை நான் இப்படி எந்த இடத்திலும் அறிவித்தது கிடையாது. அப்படி இருக்கையில் இப்படியான விஷயங்களில் வம்படியாக சென்று பதில் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று தடாலடியாக பதில் கொடுத்துள்ளார் அஞ்சலி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version