“நான் அப்படியான உறவில் இருந்தேன்..” – கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய அஞ்சலி..!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்காமலேயே ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த நடிகை அஞ்சலி தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து அதன் மூலம் பல்வேறு மொழிகளில் பட வாய்ப்புகள் பெற்றார்.

இவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு இருந்தது. இப்படி இருந்த நடிகை அஞ்சலி இடையில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்றனர்.

உச்சகட்டமாக ஒரே இடத்தில் இரண்டு பிளாட்டுகளை வாங்கி அங்கே வீடு கட்டி குடியேறும் முடிவில் இருந்தனர். இப்படி அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருந்த பொழுது தன்னுடைய காதலரும் இளம் நடிகருமான அவருக்கு போதைப்பழக்கம் ஆரம்பமாகி இருக்கிறது.

இரவு நேரங்களில் மது குடித்துக் கொண்டிருந்த அவர் பகல் நேரங்களிலும் குடிக்க ஆரம்பித்து இருக்கிறார். தான் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெறாததாலும், தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காதது, மற்றும் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சம்பளம் குறைவாக கிடைப்பது என விரக்தியில் இருந்திருக்கிறார் நடிகர்.

இதனால் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார். மட்டுமில்லாமல் அஞ்சலியிடம் கேட்க கூடாத கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றார்கள்.

இதனால் மனம் நொந்து போன நடிகை அஞ்சலி தன்னுடைய காதலனையை பிரிந்தார். மேலும் திருமணம் செய்து கொண்டு வீடு கட்டுவதாக இருந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டு அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் அஞ்சலி, நான் ஒரு மோசமான உறவில் இருந்தேன் விஷமத்தனமான உறவு அது. இதை தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன்.

புரிந்து கொண்ட பிறகும் அந்த உறவில் தொடர்வது தவறானது. எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் தண்டனை போன்றது. எனவே, அந்த உறவிலிருந்து வெளியே வந்து விட்டேன் என பேசி இருக்கிறார் அஞ்சலி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version