முன்னணி நடிகரின் கட்டுப்பாட்டில் அஞ்சலி..! குடி போதையில் அடிதடி..! என்ன நடந்தது..?

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலி ஆரம்ப காலங்களில் குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த படங்களில் நடித்த இவரது நடிப்புத் திறன் இவரை திரை உலகிற்கு அழைத்து வந்தது.

இதனை அடுத்து தெலுங்கில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல்களில் நடித்து வந்த நடிகை அஞ்சலி தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

அஞ்சலி – ஜெய்..

இதனை அடுத்து இவரது நடிப்பு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நேர்த்தியான முறையில் வெளிப்பட்டது. இந்த படத்தில் இவர் கனியாக நடித்து தமிழக இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். அது மட்டும் அல்லாமல் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருந்தினையும் பெற்றார்.

இவர் நடிகர் ஜெய் உடன் இணைந்து பலூன் திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இவர்கள் இருவருமே லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தது.

மேலும் இந்த இருவருமே சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்த காரணத்தினால் இருவரது மார்க்கெட்டும் சற்று டல் ஆனது. தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகை அஞ்சலி தனது காதல் காரணத்தால் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்தார்.

இந்நிலையில் தன் காதலனோடு நடிகை அஞ்சலி மது அருந்துவது உள்ளிட்ட கொண்டாடங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நடிகர் ஜெய் அளவுக்கு அதிகமாக குடி பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார்.

இந்நிலையில் நடிகை அஞ்சலி தான் காதலித்து வந்த நடிகர் ஜெய் இடம் உன்னை நான் குடிக்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் அதிக அளவு குடித்து ஏன் உடலை கெடுத்துக் கொள்கிறாய் என அறிவுரை கூறியதை அடுத்து ஜெய் மற்றும் அஞ்சலிக்கிடையே அடிதடி நடந்து இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தான் இவர்கள் இருவரும் தற்போது பிரிந்து இருக்கிறார்கள் என்று பிரபல நடிகர் மற்றும் திரை விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

அஞ்சலி – சமுத்திரகனி..

மேலும் நடிகர் ஜெயை விட்டு அஞ்சலி பிரிந்து இருந்தாலும் இவர் தற்போது மற்றொரு இயக்குனர் மற்றும் நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய விஷயத்தை கூறியதை அடுத்து இவருமா? அப்படி.. என்ற விதத்தில் ரசிகர்கள் பேசி வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெயின் பிரிவை அடுத்து சினிமாவில் அதிக அளவு கவனத்தை செலுத்தி வரும் அஞ்சலி தன்னிடம் யாராவது கதை கூற வந்தால் இந்த கதையை முதலில் நீங்கள் இயக்குனர் சமுத்திரக்கனி சாரிடம் சொல்லுங்கள். அவர் சம்மதம் தெரிவித்தால் நான் நடிக்கிறேன் என்று கூறுகிறார்.

இதனை அடுத்து தான் தற்போது நடிகை அஞ்சலி, நடிகர் சமுத்திரக்கனியின் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்று தானே கூற வேண்டும் என பிரபல நடிகர் பயில்வான் பேசி இருப்பது கடுமையான அதிர்வலைகளை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த நிகழ்வானது கத்தி போய் வாலு வந்த கதையைப் போல உள்ளதாக ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். அத்தோடு நடந்த விஷயத்தை அறிந்து கொண்டு வலைதள வாசிகள் இந்த விஷயத்தை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version