இந்திரா பட ஹீரோயினை நியாபகம் உள்ளதா..? 53 வயசுலயும் டைட்டான உடையில் சேட்டை..! செம்ம வீடியோ..!

நடிகை அனுஹாசன், இந்திரா படத்தில் நடித்த ஹீரோயின் இவர்தான். கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசனின் மகள்தான் அனுஹாசன்.

அதாவது கமலுக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரண்டு அண்ணன்கள். அதில் சாருஹாசன் மகள் சுஹாசினி. சந்திரஹாசன் மகள் அனுஹாசன். கமல் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன் ஆகியோரின் சகோதரிதான் இவர்.

அனுஹாசன்

கடந்த 1995ம் ஆண்டில் வெளிவந்த இந்திரா படத்தில், அனுஹாசன் நாயகியாக அறிமுகமானார்.

விஜய் டிவியில் காபி வித் அனு நிகழ்ச்சியில் பிரபல நட்சத்திரங்களை நேர்காணல் செய்தார். 3 சீசன்களாக இந்த நிகழ்ச்சி வெளியானது.

ஆளவந்தான், நள தமயந்தி, ஆஞ்சநேயா, சந்தோஷ் சுப்ரமணியம், தாம்தூம், ஆதவன், இரண்டு முகம் என பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். டிவி சீரியல்கள் சிலவற்றிலும் அனுஹாசன் நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் அனுஹாசன் நடித்திருக்கிறார்.

நடிகை அனுஹாசனுக்கு இப்போது 53 வயதாகிறது. இந்த வயதிலும் பூங்கா ஒன்றில் அவர் செய்திருக்கும் சேட்டையான காட்சிகள் இப்போது வைரலாகி வருகிறது.

பூங்காவில் சேட்டை

அதாவது பூங்கா ஒன்றில், டைட்டான பேண்ட் பனியன் அணிந்துள்ள அவர், அங்குள்ள இரும்பு படிக்கட்டுகளில், விளையாட்டு உபகரண கருவிகளில் வேகமாக ஏறி இறங்கி, அடுத்தடுத்த கருவிகளில் சென்று ஏறி இறங்குகிறார்.

முதலில் 1 நிமிடம் 5 விநாடிகளில் முடிக்கும் அனுஹாசன், அடுத்த முயற்சியில் 53 விநாடிகளில் அதை முடித்துவிட்டு சந்தோஷமாக கைகொட்டி சவாலில் ஜெயித்து விட்டதாக சிரிக்கிறார்.

53 வயதில்…

இந்த வீடியோவை பார்த்து, டிஸ்கம்பர்ட், டிஸ்அப்ரூவல் என எதுவாக உங்களுக்கு இருந்தாலும் எனக்கு கவலையில்லை. என்னோட மசில்ஸை பார்த்தீங்களா,

இந்த வயதிலும் நான் பிட்டாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும் அந்த வீடியோவில் அனுஹாசன் கூறியிருக்கிறார்.

ஆனாலும், 53 வயதில் இந்த சேட்டை என்பது அனுஹாசனுக்கு கொஞ்சம் ஓவர்தான் என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version