அயலான் அட்டர் ப்ளாப் ஆன இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியாம்..! என்ன கொடும இது..!

எப்போதுமே புதிய விஷயங்களுக்கு தான் எல்லோருமே வரவேற்பு கொடுப்பது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவை பொருத்த வரை அரைத்த மாவையே அரைப்பது என்பது அன்று முதல் இன்று வரை தொடர்கதையாகவே நீடித்து வருகிறது. இன்றைய தமிழ் சினிமா இயக்குநர்களிடம் மண்டையில் சரக்கு இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

சின்ன பட்ஜெட் படங்களாக எடுக்கப்படும் பல படங்கள், கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக இருக்கின்றன. கடந்தாண்டில் வெளிவந்த சித்தா, குட்நைட், பார்க்கிங், நாடு, குய்கோ, கிடா, தண்டட்டி, ஆயிரம் பொற்காசுகள் போன்ற படங்கள் பேசப்பட காரணம், அந்த படத்தின் மூலக்கதையும், திரைக்கதையும்தான்.

ஆனால் கமர்ஷியல் படங்கள் என்ற பெயரில் பிரபல இயக்குநர்களும் டாப் ஹீரோக்களும் ரசிகர்களை முட்டாளாக்கி தொடர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த உண்மை தெரியாமல் தமிழ் சினிமா ரசிகர்களும் காப்பியடித்த படங்களை பார்க்க கூட்டம் கூட்டமாக சென்று தங்கள் வருமானத்தில் ஒரு பெரும்பகுதியை இழந்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான லியோ படம், ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் படத்தின் காப்பி. ஜவான் படம், 23 படங்களின் காப்பி என்று கடுமையான விமர்சனத்தை சந்தித்து. இப்போது விஜய் நடித்து வரும் கோட் படமும், ஜெமினி மேன் என்ற ஹாலிவுட் படத்தின் கதை தான். இப்படி ஹாலிவுட் படங்களை சுட்டு, அந்த படக்கதைகளை அப்படியே உல்டா பண்ணி எடுப்பதுதான் தமிழ் சினிமா இயக்குநர்களின் படைப்பாற்றலாக இருக்கிறது.

அந்த வகையில், அயலான் படமும் கடந்த 2011ம் ஆண்டில் ஹாலிவுட் படமான Baul என்ற படத்தின் ஜெராக்ஸ் காப்பிதான் என்ற உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த படத்தின் டீசர், காட்சியமைப்புகள் எல்லாமே ஒன்றுபோலவே இருப்பதும் உறுதியாகி விட்டது. இதில் ஒரு கசப்பான உண்மை என்றால் அந்த படமே பயங்கர பிளாப் படம்தான். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்படி ஒரு சோதனையா?

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version