பப்லுவுடன் மீண்டும் இணைந்தாரா காதலி ஷீத்தல்..? – பார்ட்டியில் ஒரே மஜா தான்..!

நடிகர் பப்லு பிருத்விராஜ் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். 35 ஆண்டுகளுக்கு முன் கே பாலசந்தர் டைரக்‌ஷனில் வெளியான வானமே எல்லை படத்தில், கம்மங்காடே, கம்மங்காடே காளை இருக்கு பசியோடு என்ற பாடலுக்கு நடனமாடிய அந்த இளம் வயது பப்லுவை ரசிகர்களால் மறந்துவிட முடியாது.

அதன்பிறகு பாண்டியநாட்டு தங்கம், அழகன், அவள் வருவாளா, ராமன் அப்துல்லா என பல படங்களில் பப்லு நடித்தார். ஜெயா டிவியில் சவால் என்ற வித்யாசமான போட்டியை நடத்தினார். பல ஆண்டுகள் அவர் நடத்திய இந்த நிகழ்ச்சியில், பார்வையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பீனா என்ற பெண்ணை திருமணம் செய்த பப்லுக்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகன் ஒருவரும் இருக்கிறார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விவகாரத்து செய்த பப்லு, டிவி சீரியல்கள், வெப் சீரிஸ்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் பப்லு, அவரை விட 24 வயதுகள் குறைவான ஷீத்தல் என்பவருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்த நிலையில் இருவரும் சேர்ந்து நடித்து அடிக்கடி ரீல்ஸ், வீடியோ பதிவிட்டு வைரலாக்கினர். இதற்கிடையே திடீரென கடந்த மாதத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாக ஒரு தகவல் பரவி அது வைரலானது. அப்போது நேர்காணல் செய்யப்பட்ட போது, பப்லு மிக வித்யாசமாக பேசினார். ஷீத்தல் பற்றிய கேள்விளுக்கு பதிலளிக்க மறுத்தார்.

தற்போது பப்லு, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்தில் நடித்து வருகிறார். அத்துடன் அவர் சமீபத்தில் வெளியான அனிமல் படத்திலும் ஒரு கேரக்டரிலும் நடித்திருந்தார். அந்த படத்தின் பார்ட்டி சமீபத்தில் கிராண்ட் ஆக நடத்தப்பட்டுள்ளது. அந்த விழாவுக்கு பப்லுவும், ஷீத்தலும் ஒன்றாக வந்துள்ளனர். பார்ட்டியில் இருவரும் ஆடிப்பாடி சந்தோஷமாக இருந்துள்ளனர். அந்த விழாவில் கலந்துக்கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் பப்லு, ஷீத்தல் செல்பி எடுத்து வெளியிட்டுள்ளனர். அது தற்போது வைரலாகி வருகிறது. இதன்மூலம், பிரிந்த தன் காதலியை மீண்டும் இணைந்துவிட்டார் பப்லு என்ற தகவல் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version