அதுக்கு பருவம் தவறிடுச்சு.. நக்மா குறித்து மோசமாக பேசிய பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் நடிகை நக்மா முன்னணி நாயகியாக இருந்தார். இவர் நடிகை ஜோதிகாவின் மூத்த சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிக்கு ஜோடியாக பாட்ஷா படத்தில் நடித்தவர். அடுத்து சரத்குமாருடன் ரகசிய போலீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

சத்யராஜ் சொந்தமாக டைரக்ட் செய்த வில்லாதி வில்லன் படத்தில் 2 சத்யராஜ்களில் வயதான பிராமண வக்கீல் சத்யராஜூக்கு ராதிகா ஜோடி, வாலிபர் சத்யராஜூக்கு நக்மா ஜோடியாக இருந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த காதலன் படம்தான், நக்மாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

நக்மா…

நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக நக்மா, மேட்டுக்குடி படத்திலும், வேட்டிய மடிச்சுக் கட்டு படத்தில் பாக்யராஜூக்கு ஜோடியாகவும் நக்மா நடித்திருந்தார்.

பி வாசு இயக்கிய லவ் பேர்ட்ஸ் படத்தில், நக்மா வயிற்றில் பிரபுதேவா ஆப்பாயில் போட்டது, அப்போது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதலில் நடிகர் சரத்குமார், பிறகு கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலியுடன் நக்மா கிசுகிசுக்கப்பட்டார். அதன்பிறகு அவர் தமிழ் சினிமாவை விட்டும் காணாமல் போனார்.

அதுக்கு பருவம் தவறிடுச்சு..

சமீபத்தில் நடிகை நக்மா குறித்து வீடியோ ஒன்றில் பேசியுள்ள நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், ரஜினிக்கு ஜோடியாக நடித்த நக்மாவுக்கு 49 வயதான பிறகு இப்போதுதான் திருமண ஆசை வந்துள்ளது.

ஆனால் அதை பருவத்தே பயிர் செய்திருக்க வேண்டும். அதுக்கு பருவம் தவறிடுச்சு.

இனி நக்மாவை திருமணம் செய்ய பெரிய நடிகர்கள் எல்லாம் வர மாட்டார்கள். அப்படி வந்தால், நிச்சயம் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும், என்று கிண்டலாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

கல்யாணத்துக்கு பருவம் தவறிடுச்சு என நடிகை நக்மா குறித்து மோசமாக பேசிய பயில்வால் ரங்கநாதனுக்கு, சிலர் கமெண்ட்டில் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version