பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக வார இறுதியில் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் ரசிகர்களின் ஆதரவை யாருக்கு இருக்கிறது என்பதை வாக்கெடுப்பு மூலமாக தெரிந்து கொண்டு அந்த வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் அதிரடியாக வெளியேற்றப்படுவார்.
ஆனால், கடந்த வாரம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பெரும்பாலான மக்களால் வாக்களிக்க முடியவில்லை என்பதால் எவிக்ஷன் ரத்து செய்யப்பட்டது.
எனவே இந்த வாரம் இரண்டு பேர் எவிக்ட் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விட்டது.
அடுத்தடுத்த வாரங்களில் போட்டியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட வேண்டும். இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவதற்காக நாமினேசன் லிஸ்டில் அர்ச்சனா, தினேஷ், கூல் சுரேஷ் ஆகியோருடைய பெயர் இடம் பெற்றிருந்தது.
இடையில் போட்டியாளரும் நடிகருமான கூல் சுரேஷ் வீட்டிலிருந்து சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றதால் அவரை இந்த வாரம் வெளியேற்றி விடுவார்கள் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் நடந்ததோ வேறு.. திடீர் திருப்பமாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த அனன்யா ராவ்~ஐ வெளியேற்றி உத்தரவிட்டார் பிக் பாஸ்.
ஆரம்பித்த இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட நிலையில் மீண்டும் போட்டியில் கலந்து கொண்டார்.
ஆனால், தற்பொழுது மீண்டும் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது நடிகர் கூல் சுரேஷ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.
இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் நிக்சன் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு மாறாக கூல் சுரேஷ் வெளியாகி இருப்பது ஏமாற்றத்தை கொடுக்கிறது என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.