இப்படி பேசுன புள்ளைய.. நாசம் பண்ணிட்டீங்களே டா.. பாவனா-வின் பழைய வீடியோ..! புலம்பும் ரசிகர்கள்..!

திரை உலகில் தற்போது அட்ஜஸ்ட்மெண்ட்டுகள் பற்றி அதிக அளவு புகார்கள் எழுந்து வரும் நிலையில் திரையுலகம் பற்றி சிறப்பான கருத்துக்களை கூறியிருக்கும் நடிகை பாவனாவின் பழைய வீடியோ தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

பாதுகாப்பான சினிமா..

தமிழ், மலையாளத் திரைப்படங்களில் நடித்த நடிகை பாவனா தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி என்று திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். இதனைத் தொடர்ந்து தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்த இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

தமிழ், மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதோடு நிறுத்தி விடாமல் ரோமியோ, பச்சன், மைத்திரி போன்ற கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

எதிர்மறை அனுபவம்..

சமூக வலைத்தளங்களில் படுபிசியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார். இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்து உள்ளது.

இந்நிலையில் திரையுலகில் அதிகரித்து வரும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை குறித்து தினம், தினம் புதிய புதிய தகவல்கள் வெளிவருவதோடு பல நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை பட்டியல் போட்டு தெரிவித்து வரக்கூடிய நிலையில் நடிகை பாவனா திரைத்துறை பற்றி சிறப்பான கருத்துக்களை பல நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வீடியோவில் அவர் பேசும் போது நாட்டில் உள்ள எத்தனையோ துறைகளை விட சினிமாத்துறை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது. எனினும் பெண் பாதுகாப்பு என்பது மற்ற துறைகளில் கேள்விக்குறியாக இருக்கிறது என்ற பேச்சை பேசியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சினிமாவை பொறுத்த வரை பெண்களுக்கு பாதுகாப்பான இடமாகவே தற்போது வரை தான் உணர்வதாக பேசி இருக்கும் இவர் சினிமா துறையின் மூலம் மோசமான அனுபவத்தை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாவனாவுக்கு சினிமா துறையின் ஒரு மோசமான அனுபவத்தை கொடுத்தவர் நடிகர் தீலிப் இதனை அடிக்கோடு இட்டு ஒரு காலத்தில் பாதுகாப்பான துறையாக சினிமாவை பார்க்கிறேன் என சினிமா மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்திய பாவனாவை இப்படி நாசம் பண்ணிட்டீங்களேடா என்று புலம்பல் கருத்துக்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.

அத்தோடு இன்று சினிமாவில் நிலைத்து நின்று சாதிக்க வேண்டும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலவிதமான அட்ஜஸ்ட்மென்ட்கள் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் நிகழ்கின்ற விஷயங்களை நாம் படித்திருக்கலாம்.

இதில் பிரபலமான நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என மேல் தட்டு முதல் அடித்தட்டு வரை பல்வேறு வகைகளில் மீடு புகார்கள் எழுந்து வரக்கூடிய நிலையில் பாவனா இது போன்ற கருத்தை அடுத்து அவர் சினிமா மீது எவ்வளவு பற்றோடு இருக்கிறார் என்பதை மட்டும் தான் உணர்த்தி உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் திரைத்துறையால் பாதிக்கப்பட்ட ஒருவரே பல ஆண்டுகளுக்கு முன்பு திரை துறையை பெருமையாக பேசிய விஷயம் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version