14 வயசுலையே ஹீரோயின் ஆகணும்-ன்னு என் உடம்பில் அதை பண்ணாங்க..! – நடிகை பாக்கியலட்சுமி பகீர்..!

பிரபல நடிகை பாக்கியலட்சுமி தனக்கு 14 வயதில் தன்னுடைய தாயின் அனுமதியுடன் தனக்கு நடந்த கொடுமை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று வெறியோடு இருக்கக்கூடிய பலரும் அதற்காக பல வகைகளில் பல தியாகங்களை செய்வது மட்டும் இல்லாமல் சினிமாவில் நடிப்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் தங்களை வளைந்து கொடுக்கக்கூடிய அளவுக்கு செல்கிறார்கள்.

குறிப்பாக சில நடிகைகள் பட வாய்ப்புக்காக தங்களையே இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளவர்கள் என பலருடன் பகிர்ந்து கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள் என்பது சினிமா துறையினர் வாயாலேயே வெளிவந்திருக்கிறது.

இந்நிலையில், தனக்கு 14 வயது ஆன பொழுது ஹீரோயினாக வேண்டும் என்ற காரணத்திற்காக தன்னுடைய அம்மாவுக்கு தெரிந்த எனக்கு ஒரு கொடுமை நடந்தது. அதனால் பல்வேறு பாதிப்புகளுக்கு நான் ஆழானேன் என்று நடிகை பாக்கியலட்சுமி கூறியிருக்கிறார்.

வாருங்கள்.. அவர் என்ன கூறினார் என்று தெளிவாக பார்க்கலாம். 80-களில் பிரபலமான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்தவர் நடிகை பாக்கியலட்சுமி. இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என பல்வேறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் குறிப்பாக நடிகர்கள் கார்த்தி நடிகை சீதா ஆகியோர் நடிப்பில் வெளியான ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதே திரைப்படத்தில் தற்போதைய தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்கள் எழுதிய கதையில் வெளியான இந்த திரைப்படம் பாக்கியலட்சுமி என் முதல் தமிழ் திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பாக்கியலட்சுமி.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பாக்கியலட்சுமி தன்னுடைய 14 வது வயதில் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற காரணத்தினால் என்னுடைய உடலை பெரிதாக காட்ட ஹார்மோன் ஊசிகளை போட்டுக் கொண்டதாக கூறியிருக்கிறார்.

மட்டுமில்லாமல் என்னுடன் நடித்த நடிகைகள் பலரும் உடல் ஊட்டமாக புஷ்டியாக இருப்பார்கள். அவர்களுக்கு இணையாக நானும் இருக்க வேண்டும் என்பதால் ஹார்மோன் ஊசியை போட்டுக் கொண்டு உடல் எடையை அதிகரித்ததாக கூறியிருக்கிறார்.

உடலுடைய எடை கூடிய பிறகு எனக்கு சினிமாவில் நடிக்கக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், உடல் எடையை கூறியது மட்டுமில்லாமல் இன்னும் சில பக்க விளைவுகளும் அந்த ஹார்மோன் ஊசியால் எனக்கு ஏற்பட்டது.

குறிப்பாக என்னுடைய கர்ப்ப காலத்தை வெகுவாக பாதித்தது என்று கூறியிருக்கிறார். எனக்கு ஹார்மோன் ஊசி போடப்பட்ட விவகாரம் என்னுடைய அம்மாவுக்கு தெரிந்தே தான் நடந்தது. ஆனால் என்னுடைய அப்பாவுக்கு தெரியாமல் மறைத்து விட்டார்கள்.

என்னுடைய உடல் பருமன் ஆக வேண்டும் என்பதால் வெளியே இந்த விஷயத்தை சொல்லாமல் ஹார்மோன் ஊசியை போட்டு விட்டார்கள் என்று கூறியிருக்கிறார் பாக்கியலட்சுமி. இவருடைய இந்த பேச்சு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்தியுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version