BiggBoss Maya : ஹீரோயின் ஆகும் பிக்பாஸ் மாயா..! இயக்குனர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நடந்து முடிந்துவிட்டது. இந்த சீசனில் அதிகமான அலப்பரைகளை செய்து பிக்பாஸ் வீட்டுக்குள் அதிக கவனத்தை ஈர்த்தவர் மாயா தான்.

பிக்பாஸ் வீட்டுக்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா குரூப்தான், பிரதீப் ஆண்டனியை அநியாயமாக வெளியே அனுப்பியது. இதற்கு முக்கிய காரணமே மாயா தான் என்ற கடுமையான விமர்சனமும் எழுந்தது.

அதுமட்டுமின்றி மாயாவின் ஆதரவாளராக கமல் செயல்படுகிறார். மாயா செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க மாட்டார். ஆனால் மாயா மற்றவர்கள் மீது சொல்லும் குற்றச்சாட்டுகளை மட்டும் கமல் கேட்டுக்கொள்வார் என்ற சர்ச்சையும் எழுந்தது.

ஏற்கனவே விக்ரம் மற்றும் லியோ படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார் மாயா. இதுதவிர பல படங்களில் செய்தி வாசிப்பாளராக, செய்தியாளராகவும் சில படங்களில் மாயா நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின், மாயாவுக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென் தமிழில் முதன்முறையாக இயக்கும் ஒரு புதிய படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க மாயா கமிட் செய்யப்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன், சமந்தா நடித்த யசோதா போன்ற படங்களில் சண்டை பயிற்சி இயக்குநராக யானிக் பென் பணிபுரிந்தவர். ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களுக்கும் இவர் சண்டை பயிற்சி இயக்குநராக பல படங்களில் பணிசெய்திருக்கிறார்.

ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென் இயக்கும் புதிய தமிழ் படத்தில் மாயா ஹீரோயினாக நடிப்பது, இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version