பப்ளிசிட்டி பைத்தியமாக மாறிய பிக்பாஸ் பிரபலம் – அவர் சேட்டையை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட ரசிகர்கள்..!

விஜய் டிவி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டாலே, இந்த உலகமே நம்மை திரும்பி பார்த்துவிடும். நம்மை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் என்ற நினைப்பில்தான், அந்த வீட்டுக்குள் பலரும் போட்டியாளர்களாக வருகின்றனர்.

ஆனால் அது 3 நேரமும் சோறு போட்டு, சம்பளம் கொடுத்து அவர்களை அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பும் ஒரு நிகழ்ச்சி என்பது பலருக்கும் தெரிவதே இல்லை. அது தெரியாதபடி கமல்ஹாசன் வந்து ஒவ்வொரு வாரமும் பில்டப் கொடுத்து, போட்டியாளர்களை யோசிக்க விடாமல் செய்து விடுகிறார்.

அந்த வகையில், இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்களின் பூர்ணிமா, மிக மிக அதிக எதிர்பார்ப்புடன் நடந்துக்கொண்டார். ஆனால் கடைசியில் கிடைத்த வரை லாபம் என 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறினார். அவரை பூப்போட்டு வீட்டுக்குள் வரவேற்ற வீடியோ சமீபத்தில் வைரலானது.

பிக்பாஸ் செலிபரட்டி என்ற பேரும், புகழும் தன்னை வேற லெவலுக்கு கொண்டு சென்று விடும் என நினைத்த பூர்ணிமா பப்ளிசிட்டிக்காக கோவிலுக்குள் செல்லும் போதெல்லாம் கூட பெரிய மாஸ்க் அணிந்துக்கொண்டு, தன்னை மறைத்துக் கொள்கிறார். ஏனென்றால் பிக்பாஸ் பார்த்த ரசிகர் கூட்டம் தன்னை மொய்த்துக்கொண்டால் என்னாகும் என்ற அச்சம்தான் காரணம்.

இவருக்கு இப்போது இன்னொரு பட்டப்பெயர் என்னவென்றால் மீரா மிதுன் 2.0 என்றுதான் பூர்ணிமாவை அழைக்கின்றனர். ஏனென்றால், ஒரு காலத்தில் பப்ளிசிட்டி பைத்தியமாக அவர் இருந்தார். அவரது வெர்சனாக இப்போது பூர்ணிமாவும் பொது இடங்களில் பில்டப் செய்து வருகிறார் என பலரும் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version