“என்னடா.. சொல்றீங்க.. அம்மாவான பிக் பாஸ் பூர்ணிமா..” ஷாக் ஆன ரசிகர்கள்..!

விஜய் டிவியில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் ஏழாவது சீசனில் பூர்ணிமா விளையாடி வருகிறார். இவர் ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படத்தில் நடித்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் ஹைலைட்டாக இருந்தவர்கள் மாயாவும், பூர்ணிமாவும் தான். தனது கேப்டன்ஷிப்பை ஒழுக்கமாக செய்த நபர் என்ற பெயரை பூர்ணிமா பெற்றிருந்தாலும் சில சமயங்களில் மாயா எல்லை மீறி சென்றதாக பல விமர்சனங்கள் எழுந்தது.

அதிலும் குறிப்பாக விஜித்ராவிடம் பூர்ணிமா உங்க மூளை கீழே இருக்கு எடுத்துக்கோங்க என்று சொன்ன வார்த்தைகள் கடுமையான கண்டனத்தை பெற்றது. அது மட்டுமல்லாமல் நிக்ஸனுடன் இணைந்து நடனம் ஆடியது ஒருபுறம் ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும், அண்ணன், தம்பி என்று உறவை சொல்லி கொண்டு இப்படி எல்லாம் செய்வது முறையா? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில் அராத்தி என்ற யூடியூப் சேனலில் பெரிய நடிகை ஆவது தான் தனது ஆசை என்பதை பூர்ணிமா வெளிப்படுத்தி இருப்பார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பே நயந்தாராவோடு இணைந்து நடித்திருந்தவர். தற்போது ஹீரோயினியாக நடிக்க இருக்கிறார்.

அதுவும் செவப்பி என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஹீரோயினியாக நடிக்க இருக்கும் பூர்ணிமா நல்ல பெயரை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமானது ஆஹா என்ற ஓடிடி தளத்தில் வெளி வர உள்ளது. மேலும் இந்த படத்தை எம்.எஸ் ராஜா என்பவர் இயக்குகிறார்.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் பூர்ணிமா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க இருக்கிறார். அது தொடர்பான போஸ்டரும் வெளி வந்து விட்டது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பொதுவாகவே சினிமாவில் வளர்ந்து வரும் போது இது போல அம்மா ரோலிங் நடிக்க பலரும் தயக்கம் காட்டுவார்கள்.

ஆனால் தைரியமாக பூர்ணிமா அந்த கேரக்டரை ஏற்றுக்கொண்டது பாராட்டத்தக்கது. இவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என பாராட்டி இருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த விஷயம் இணையத்தில் பேசும் பொருளாக உருவெடுத்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version