கடந்த அக்டோபர் மாதம்1ம் தேதி பரபரப்பாக தொடங்கிய பிக் பாஸ் ஏழாவது சீசன் 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் மூன்று வாரங்களை எஞ்சியுள்ள நிலையில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். சிலர் மீண்டும் உள்ளே நுழைந்து இருக்கின்றனர்.
இந்த வாரம் வழக்கம் போல பிக் பாஸ் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வந்திருக்கிறார்கள்.
இதனால் பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவில் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால், போட்டியாளர் ரவீனாவின் சித்தி மற்றும் சகோதரர் வீட்டிற்கு வர சில கோட் வோர்டுகளை பயன்படுத்தி பிரதீப் ஆண்டணி குறித்து பேச சுதாரித்துக் கொண்ட பிக் பாஸ் உடனடியாக அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றினார்.
அந்த விஷயம் பிக் பாஸில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் யார் என்று தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன. இந்த வாரத்திற்கான நாமினேஷனில் நடிகை ரவீனா, பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் சரவண விக்ரம் மற்றும் நடிகை விசித்ரா ஆகிய மூன்று பேர் மட்டும் தான் இருக்கின்றனர்.
இதில் நடிகை விசித்ரா வெளியேற வாய்ப்பு இல்லை. ரவீனா,மணி ஜோடி இன்னும் மூன்று வாரங்களுக்கு கண்டெண்ட் கொடுப்பார்கள்.
எஞ்சியுள்ளது நம்ம டைட்டில் வின்னர் சரவண விக்ரம் தான் என பலரும் கூறினார்கள். ரசிகர்கள் கணித்தது போலவே பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் சரவணா விக்ரம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார் என்ற தகவல் சற்று முன் இணையத்தில் கசிந்துள்ளது.
இதனை அறிந்த ரசிகர்கள் என்னடா இது பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு வந்த சோதனை.. கொடுமை.. கொடுமை.. என்று உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.