முன்பெல்லாம் வெள்ளித்திரையில் கொண்டாடி தீர்த்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரையில் நடிப்பது வழக்கம். ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் கொடிகட்டி பறக்கும் நாயகி, பிரியா பவானி சங்கர். இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி.
தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக உருமாறியுள்ளது. தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பிறகு இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தார்.
தற்போது குருதி ஆட்டம், ஹரிஷ் கல்யாண் படம், இந்தியன் 2, பொம்மை, அகம்பிரம்மாஸ்மி, விஷாலுடன் ஒரு படம் என பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. முதலில் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருந்த பிரியா பவானி சங்கர் சமீப காலமாக தொடர்ந்து ஜிம் ஒர்க் அவுட் செய்து தன்னுடைய உடல் எடையை பாதியாகக் குறைத்து எலும்பும் தோலுமாக மாறிவிட்டார்.
சோஷியல் மீடியாக்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இளம் நடிகைகளில் பிரியா பவானி சங்கர் ஒருவர். தன்னை கடுமையாக அல்லது தகாத முறைகள் விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு அவ்வப்போது தக்க பதிலடியும் கொடுப்பதில் வல்லவர். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டா ஃபாலோயர்களுடன் ஒரு கேள்வி பதில் அமர்வை நடத்தினார்.
தனது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்த பிரியா, அவரை திருமணம் செய்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் கொடுத்துள்ளார் பிரியா.
ரசிகர் ஒருவர், வசூல் ராஜா சாம்பு மவன் கணக்காக “உங்கள கல்யாணம் பண்ணிக்க என்ன ப்ரொசீஜர்..??” என்று ஹார்டின் ஈமோஜிகளுடன் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு, தான் ஏற்கனவே காதலில் இருப்பதாக நினைவூட்டிய நடிகை, என்னை திருமணம் செய்து கொள்வதற்கான செயல்முறை உங்களுக்கு தெரியவில்லை என்றால் அது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. ஏனென்றால் இப்போது புதிதாக ஒருவருக்கு ஓகே சொல்வது மிகவும் சிக்கலானது என்று வேடிக்கையாக கூறினார்.