சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா ராணி. தற்போது, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக, தான் நடித்துக்கொண்டிருந்த சீரியல்களில் இருந்து விலகி விட்டார்.
வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றாலும் தன் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறார் நீலிமா.
நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் லட்சியங்களை எப்போதும் விட்டு கொடுத்ததே இல்லை. தன்னம்பிக்கைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சினிமாவில் நடிப்பதற்கு அழகு மட்டும் போதாது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும், இல்லாவிட்டால் சினிமாவில் பெயர் சொல்லும்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக்கொம்பாகி விடும்.
இதற்கு நல்லதொரு உதாரணம் நம்முடைய நீலிமா ராணி. பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் சீரியலில் தோன்றினாலும் அவரது சினிமா ஆசை இன்னும் குறையவே இல்லை. பல பேர், நீலிமா இன்னும் திருமணம் ஆகாத பொண்ணு என்று நினைத்து சைட் அடித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதற்கு காரணம் நீலிமாவின் உடல் அமைப்பு. வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்ற இவர் தற்போது தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார்.சினிமா நடிகைகளுக்கு இணையாக இவரும் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தற்போது, தனியாக யூட்யூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ள நீலிமா ராணி அதில் பொதுவான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், புடவை கட்டுவது எப்படி..? என்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.