நடிகை நிதி அகர்வால், தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியுள்ளார் நிதி அகர்வால்.
கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். ஐதராபாத் சேர்ந்த நிதி அகர்வால், மாடலிங்கில் ஆர்வம் கொண்டவர்.
முதன்முதலில் இந்தியில் ‘முன்னா மைக்கேல்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் சிம்பு நடித்து வெற்றிப்பெற்ற ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து உதயநிதியுடன் ஒரு படத்தில் நிதி அகர்வால் நடிக்கவுள்ளார். தமிழில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால், அவ்வெவ்போது புதிய போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.. கொஞ்சம் விட்டா கழண்டு விழுந்துடும் போல இருக்கே என்று கலாய்கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.