முதல் முறையாக கேங்ஸ்டர் டானாக சிம்பு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர். இந்தியன் 2, ஓ மணப்பெண்ணே, குருதி ஆட்டம் என அடுத்தடுத்து மிகப் பெரிய படங்கள் இவருக்கு வெளியாக இருக்க மீண்டும் அருண் விஜய்யுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கலக்க உள்ள பிரியா பவானி சங்கர் இப்பொழுது மகாராணி போல ஜொலிக்கும் கெட்டப்பில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு சிறப்பு தரிசனம் கொடுத்து வைரலாகி வருகிறார்.
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்தியன்2, கசடதபற, குருதி ஆட்டம், பொம்மை, களத்தில் சந்திப்போம் ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி முன்னணி நடிகைகளே பொறாமைப்படும் அளவிற்கு அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர்.
மேலும் பிரியா பவானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.2021ம் ஆண்டை பொறுத்தவரை ‘குருதி ஆட்டம்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘பொம்மை’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘கசடதபற’, ‘இந்தியன் 2’, ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்
அந்த வகையில், தற்போது இரவு நேரத்தில் லைட் வெளிச்சத்தில் மிதமாக இடையை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.