விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலேயே நடிப்பு மீது இருந்த அர்வத்தால் நிறைய ஆடிஷன் அட்டன் பண்ணியுள்ளார்.
இவர் ஒரு டான்ஸரும் கூட. கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். முதன்முதலில் சன்டிவியின் பிரபல 90’s ஃபேவரைட் சீரியலான தென்றலில் நிலா என்ற கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்தார்.
அவரது கேரக்டருக்கு கிடைத்த ரீச்சை தொடர்ந்து பல முன்னணி டிவிகளில் உள்ள சீரியல்களில் எல்லாம் நடித்துக்கொண்டிருந்தார்.பொன்னூஞ்சல், சோலார் டிவியின் தாமரை சீரியல், மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, அழகி, களத்து வீடு, மோகினி போன்று பல சீரியல்களில் வரிசையாக நடித்து வந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அரண்மனை கிளி சீரியலில் ரேணுகா என்ற ரோலில் வில்லியாக நடித்தார். பாசிட்டிவ் கேரக்டரை விட நெகட்டிவ் கேரக்டர்தான் இவருக்கு அதிகமாக கிடைக்கிறதாம். நடிப்பை தாண்டி இவர் Mr and Mrs கில்லாடி, ஜோடி நம்பர் 1 சீசன் 9 போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார்.
இவர் டான்ஸர் யுவராஜ் என்பரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்க ஒரு மகன் உள்ளார்.விஜய் டிவியை தொடர்ந்து சன் டிவிக்கும் அறிமுகமாகியுள்ளார். அந்த வகையில் சன் டிவியில் சித்தி 2 மற்றும் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.
பொதுவாக நடிகைளை விடவும் பல வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார்கள்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ரவுடி கேட்டப்பில் தெனாவெட்டாக நிற்கும் சில புகைப்படங்களை வெளியிட்டதுடன், இன்னா மயிலு சிரிச்சுகுன.. பாடலுக்கு நடனம் ஆடியும் ஒரு வீடியோவ வெளியிட்டு அதகளம் செய்துள்ளார்.