சின்னத்திரையின் மூலம் அறிமுகமான பல நடிகர், நடிகைகள் தொடர்ந்து தங்களது சிறந்த நடிப்பினால்,விடாமுயற்சியாலும் வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்-நடிகைகளாக கலக்கி வரும் பலர் உள்ளார்கள்.
அந்தவகையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்தவர் நடிகை வாணி போஜன்.
தற்பொழுது இவர் இளைஞர்களின் இதயத் துடிப்பாக மாறி உள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
இந்நிலையில் இவர் தெய்வமகள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் வாணி போஜன் முதல் படமாக இருந்தாலும் அந்த திரைப்படம் சிறப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக காத்திருந்தார்.
அந்த வகையில் இவர் எதிர்பார்த்தது போலவே தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னணி நடிகரான அசோக்செல்வன், ரித்திகா சிங் ஆகியோருடன் இணைந்து ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இத்திரைப்படத்தில் இவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வாணிபூஜன் மற்றும் ஜெய் கூட்டணியில் ட்ரிபிள்ஸ் என்ற வெப் சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வழியாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதனைத்தொடர்ந்து நடிகர் வைபவ்வுடன் இணைந்து லாக்கப் திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது இவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், மெழுகு சிலை.. கிளாமர் ராணி.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.