ப்ளூ சட்டை மாறனின் படத்திற்கு ஆப்படித்த சென்சார் – முதன் முறையாக வெளியான காரணம்..!

பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றும் பாராமல் கடுமையாக விமர்சிப்பவர் ப்ளூ சட்டை மாறன் என்கிற சி. இளமாறன். ‘பல படங்களை வாய்க்கு வந்தபடி விமர்சிக்கிறாயே? தில் இருந்தால் நீ ஒரு படம் எடுத்துக்காட்டு. நாங்கள் அதை விமர்சிக்கிறோம்’ என்று திரைத்துறை பிரபலங்களும், முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சவால் விட்டு வருகின்றனர். 

 

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘ஆன்டி இண்டியன்’ எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். ப்ளூ சட்டை மாறன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார். 

 

இத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர். படத்தை இயக்கிய ப்ளூ சட்டை மாறனோ இதுவரை தமிழ் திரையுலகினர் சொல்ல மறந்த கதையை துணிச்சலுடன் படமாக்குவதாக கூறி களமிறங்கினார்.

 

லாக்டவுனில் கிழிந்த முகத்திறை 

 

லாக்டவுன் நேரத்தில் புதிய படங்கள் எதுவும் வெளியாக நிலையில் வருமானத்திற்கு வழியில்லாமல் தவித்து வந்த ப்ளூ சட்டை தன்னுடைய முகத்திறையை விளக்கினார். கடவுள் இல்லை குருப்பின் ஆஸ்தான அம்பலவானன் நான் என்பதை தன்னுடைய யூ-ட்யூப் பக்கத்தில் நிருபித்தார். சினிமா வெளியாகததால் விமர்சனம் செய்ய முடியவில்லை. 

 

இதனால், கடவுள் மறுப்பு கொள்ளை என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் தாக்கி பேசுவதற்கு தன்னுடைய யூட்யூப் சேனலை தற்காலிகமாக வாடைக்கு விட்டு வயிறு வளர்த்து வந்தார் ப்ளூ சட்டை. இதனால், இத்தனை நாளாக ப்ளூ சட்டை என்று நினைத்து கொண்டிருந்த மாறன் ப்ளூ சட்டை அல்ல, அவர் அமங்கலத்தின் குறியீடான கருப்பு சட்டை என்பது பலருக்கும் தெரிந்தது. 

படத்தை தடை பண்றோம்

 

படப்பிடிப்பு முழுமையடைந்து படமும் தயாரானது படத்தை சென்சாருக்கும் அனுப்பினர். ப்ளூ சட்டை மாறனின் கைவண்ணத்தில் தயாரான ஆண்டி இண்டியன் படத்தை அமைதியாக பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் ஒரு இடத்தில் கூட கட் சொல்லவில்லை…! இதனால் படக்குழுவினர் எப்படியும் தங்கள் படத்திற்கு யூ சர்ட்டிபிகேட் கிடைத்து விடும் என்ற மகிழ்ச்சியில் இருந்ததாக கூறப்படுகின்றது. 

 

படத்தின் கிளைமேக்ஸ் முடிந்த அடுத்த நொடி, மொத்த படத்தையுமே தடை செய்வதாக கூறி டுவிஸ்ட் வைத்த தணிக்கை அதிகாரிகள் எழுந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது. என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் ப்ளூ சட்டை மாறனும், தயாரிப்பாளர் ஆதம் பாவாவும் அதிர்ச்சி அடைந்தனர். 

 

படத்தில் காரணம் இல்லை.. படமே காரணம் தான்..!

 

வழக்கமாக ஒரு படத்தை தடை செய்ததற்கு என்ன காரணம் ? என்று அதிகாரிகள் சொல்வது வழக்கம் என்று கூறப்படுகின்றது ஆனால் இந்த படத்தை எதற்காக தடை செய்தனர் என்பது தெரிவிக்கப்படாததால் ஆண்டி இண்டியன் குழுவினர் குழம்பி போயுள்ளனர்..! இது குறித்து தணிக்கை குழுவில் உள்ள சிலரிடம் பேசியபோது ஆண்டி இண்டியன் தடைக்கான சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தது. 

 

2 மணி நேரம் ஓடும் படத்தில் பெரும்பாலான காட்சிகளில் மத நம்பிக்கைகள், மத அமைப்புகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், மத ரீதியான கலவரங்களை உருவாக்ககூடிய அளவுக்கு சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்றும் சுட்டிகாட்டினர். 

 

உடல் நிலையை காரணம் காட்டி, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நடிகர் ரஜினியை கேலி செய்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

 

சினிமா எப்படி இருக்கணும்

 

ஒரு சினிமா, பொழுது போக்கு அம்சங்களுடன், சமூக நல்லிணக்கத்தையும், சகிப்புதன்மையையும் வலியுறுத்த வேண்டுமே தவிர, தனிமனித தாக்குதல் மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்பதால் ஆண்டி இண்டியனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

 

ஆண்டி இண்டியன் படத்தின் தயாரிப்பாளரோ தடையை மறுபரிசீலனை செய்ய டிரிபியூனல் செல்ல விருப்பதாக தெரிவித்தார். ப்ளூ சட்டை மாறன் குழுவினர், ஆண்டி இண்டியனை டிரிபியூனலில் திரையிட்டால் அந்த படத்தை பார்த்து அனுமதி வழங்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் யார் தெரியுமா ? வேறு யாருமல்ல , பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி பேச்சாளர் நடிகை கவுதமி தான். 

 

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால் ஒரு வேளை படத்தை வெளியிடலாம் என்று பார்த்தால் படத்தில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகள் சர்ச்சைக்குரியவையாகவே இருப்பதால் ஆண்டி இண்டியன் அரைமணி நேர இண்டியனாகி விடுவான் என்பதால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றது ஆண்டி இண்டியன் படக்குழு.

 

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..

 

அதே நேரத்தில் எல்லா படத்திலும் ஏதாவது ஓட்டையை சொல்லி யூடியூப்பில் சேட்டை செய்த சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ஓட்டையையே ஒரு படமாக எடுத்து வைத்திருப்பதாக கூறி திரையுலக சந்தானங்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன என ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version