“இதை பாத்துமா உன் புருஷன் உசுரோட இருக்கான்…” – ரசிகரின் மனைவியை கொச்சையாக பேசிய அனிதா சம்பத்..!

இந்த பிக்பாஸ்நிகழ்ச்சியை பொறுத்தவரை யாருடைய இமேஜ் எப்படி மாறும் என்பதே பலருக்கும் தெரியாது. வெளியில் கெட்டவர் என்ற பிம்பத்தில் பார்க்கப்பட்ட ஒருவர் பிக்பாஸ் வீட்டில் மிகவும் நல்லவராக தோன்றுவார். அதே சமயம், வெளியில் ஆஹா ஓஹோ என கொண்டாடப்பட்டவர் பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய பெயரை மோசமாக கெடுத்துக்கொள்வார். 

 

அந்த வகையில், பிக்பாஸ் ஜூலிக்கு பிறகு வெளியில் கொண்டாடப்பட்டு உள்ளே டேமேஜ் ஆன ஒருவர் தான் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் முன்பே சொல்லிக்கொள்ளும் படி ரசிகர் வட்டத்தை கொண்டிருந்தவர் அனிதா சம்பத். 

 

ஆனால், பிக்பாஸ் வீட்டில் தன்னுடைய பெயரை எடக்கு மடக்காக டேமேஜ் செய்து கொண்டார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்ட அனிதா சம்பத் ஏகப்பட்ட நெகடிவ் கமெண்ட்களை சம்பாரித்தார். 

 

இவர் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களான அர்ச்சனா, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரும் சமூக வலைத்தளங்களில் பலவித விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் ஆளனார்கள். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் அவ்வளவாக தலைகாட்டவில்லை. 

 

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றனர். அதில் அனிதா சம்பத்தும் கலந்துகொண்டு பிரபல நடிகர் ரியாஸ்கான் மகனான ஷாரிக்குடன் இணைந்து நடனமாடி வருகிறார். 

 

 

அப்போது எடுக்கபட்ட புகைப்படங்களை அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், கேவலமாய் இல்லையா கண்டவன் கூட நிற்கிறத பெருமையா போட்டுட்டு இருக்க. இதைப் பார்த்துமா உன் புருஷன் உசுரோட இருக்கான் என பேசியிருந்தார். இதனை பார்த்து கடுப்பான அனிதா சம்பத், அவனோட வழியிலே பதிலடி கொடுத்துள்ளார். 

 

அந்த ரசிகரின் கமெண்ட்க்கு, உன்னோட பெட்ரூமை பாரு, நீ இன்ஸ்டாகிராமில் என்ன திட்டுற நேரத்தில் உன் பொண்டாட்டி வேற யார் கூடயாவது போயிட போறாங்க என அந்த ரசிகரின் மனைவியை பற்றி கொச்சையாக பேசியுள்ளார் அனிதா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version